தேங்காய் அனைத்து வகை இந்திய சமையல்களிலும் பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது.. ஆனால், அந்த தேங்காய்யை உடைப்பது எளிதான காரியமல்ல என்பது தினசரி சமைக்கும் அனைவருக்கும் தெரியும்.. ஒருவர் கையில் ஒரு தேங்காய் கொடுத்து உடைக்க சொன்னால் போதும்.. அவர் வலிமையானவரா, இல்லையா என்பது தெரிந்துவிடும். சமையலறையில் தனியாளாக அனைத்தையும் சமாளிக்கும் பெண்கள் கூட, சில சமயங்களில் தேங்காய் உடைப்பதற்கு மட்டும் வீட்டிலிருக்கும் யாரையாவது சார்ந்துதான் இருக்கின்றனர்.
தேங்காய் உடைப்பது ஒரு பெரிய வேலை என்றால், தேங்காய் சிரட்டையில் இருந்து தேங்காயை பிரித்தெடுப்பது எவ்வளவு கஷ்டம் என சொல்ல தேவையே இல்லை.. அதுவும் கொஞ்சம் முத்தின தேங்காய் என்றால், தேங்காய் ஓட்டோடு ஓட்டிக் கொண்டு, அதை தனியாக பிரித்து எடுப்பதற்குள் ஒரு வழியாகி விடுவோம்..
ஆனால் இனி தேங்காயை ஓட்டிலிருந்து தனியாக பிரிப்பது அவ்வளவு பெரிய வேலையாக இருக்காது. IAS அதிகாரி சுப்ரியா சாஹு, தனது ட்வீட்டரில் ஒரு சுவாரஸ்யமான சமையல் ஹேக்கைப் பகிர்ந்துள்ளார்.
கீழே உள்ள வீடியோவை பாருங்கள்:
உடைத்த பாதி தேங்காயை அடுப்பில் தீயில் வைத்து விடுங்கள். சிறிது நேரம் கழித்து அந்த தேங்காயை எடுத்து ஒரு நீர் ஊற்றிய கிண்ணத்தில் வைத்தால் போதும். என்ன ஒரு அதிசயம்!
சிரட்டையிலிருந்து தேங்காய் மட்டும் தனியாக வந்து விடும்.
தேங்காயை அடுப்பில் வைப்பதால், அந்த வெப்பம் தேங்காய் சதைக்குள் எண்ணெயை செயல்படுத்துகிறது, இதனால் வெளிப்புற ஓடு தளர்ந்து பலவீனமடைகிறது.
அடுத்தமுறை வீட்டில் தேங்காய் துருவ கஷ்டப்படும் போது இந்த குறிப்பை மறக்காம முயற்சி பண்ணுங்க..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“