Advertisment

பேக்கிங் சோடா இருக்கா? கருகிய பாத்திரங்களை இப்படி கிளீன் பண்ணுங்க

பேக்கிங் சோடா மற்றும் வினிகர் ஆகியவை கடாயில் இருந்து அனைத்து கார்பன் படிவுகளையும் அகற்றும்.

author-image
WebDesk
Aug 20, 2022 13:39 IST
New Update
Kitchen hacks in tamil

tips to clean burnt pan baking soda white vinegar

நீங்கள் வழக்கமாக சமைப்பவரா? அப்படியானால், பாத்திரங்கள் கரிந்து போகும் பிரச்சனையை அடிக்கடி நீங்கள் அனுபவித்திருக்கலாம். கருகிய பாத்திரங்களை சுத்தம் செய்வது பெரிய வேலை. கை வலிக்க பானையை தேய்த்தாலும் எரிந்த கறை முழுமையாக நீங்காது.

Advertisment

செஃப் நேஹா தீபக் ஷா பரிந்துரைக்கும் ஹேக்ஸ் இதோ!

என்னை போலவே நிறைய சமைத்த பிறகு, உங்கள் பாத்திரங்களை நிறைய சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். வீட்டில் எளிதாகக் கிடைக்கும் அனைத்தையும் பயன்படுத்துங்கள்.

என்ன தேவை?

* பேக்கிங் சோடா

* வினிகர்

*துணிகளை கழுவும் சோப்பு

எப்படி சுத்தம் செய்வது?

எரிந்த கடாயை நனைத்து, சிறிது பேக்கிங் சோடாவை தூவவும். அதை 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

பிறகு, வெள்ளை வினிகரை தெளிக்கவும். அதை 30-40 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

இப்போது மெட்டல் ஸ்க்ரப் பயன்படுத்தி துடைக்கவும்.

இது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், அலுமினியம் மற்றும் இரும்பு பாத்திரங்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. பேக்கிங் சோடா மற்றும் வினிகர் ஆகியவை கடாயில் இருந்து அனைத்து கார்பன் படிவுகளையும் அகற்றும்.

இது எப்படி வேலை செய்கிறது?

பேக்கிங் சோடா அல்லது சோடியம் பைகார்பனேட் ஒரு மென்மையான சிராய்ப்புப் பொருளாகும், இது துர்நாற்றத்தை நீக்கவும், சுத்தம் செய்யவும் உதவுகிறது.

இயற்கையில் அமிலத்தன்மை கொண்ட வினிகர், ப்ளீச் உள்ளிட்ட பிரபலமான கிளீனர்களுக்கு பதிலான ஒரு பயனுள்ள, நச்சுத்தன்மையற்ற மாற்றாகும். இது வாசனை நீக்குகிறது, கறை மற்றும் துருவை அகற்ற உதவுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment