scorecardresearch

Kitchen hacks: இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் போது இதையெல்லாம் செய்யாதீங்க

செஃப் சஞ்சீவ் கபூர் இரும்பு பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்தும் போது, பின்பற்ற வேண்டிய அத்தியாவசிய குறிப்புகளை பகிர்ந்துள்ளார்.

Iron Cookware
Iron cookware Maintenance Tips

ஒவ்வொரு சமையலறையிலும், இரும்பு சமையல் பாத்திரங்கள் இன்றியமையாத பகுதியாகும். இரும்பு பாத்திரங்களில் சமைப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. இருப்பினும், இரும்பு சமையல் பாத்திரங்களில் சமைக்கும் முன் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். செஃப் சஞ்சீவ் கபூர் இரும்பு பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்தும் போது, பின்பற்ற வேண்டிய அத்தியாவசிய குறிப்புகளை பகிர்ந்துள்ளார்.

இரும்பு கடாயை பயன்படுத்துவதற்கான வழிகள்

*இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் போது எலுமிச்சை சாறு, சிட்ரிக் அல்லது அசிடிக் உள்ள எதையும் சேர்க்க வேண்டாம், ஏனெனில் அது உணவுக்கு உலோக சுவையை சேர்க்கலாம்.

*உணவை இரும்பு பாத்திரத்தில் சமைத்தவுடன், அதில் அப்படியே வைத்து விடாதீர்கள். உடனடியாக அதை வேறு பாத்திரத்துக்கு மாற்றவும். இது உணவு கருப்பு நிறமாக மாறாமல் தடுக்க உதவுகிறது.

இரும்பு தவா சீசனிங்

*”இரும்பு தவாவை சீசன் செய்வது மிகவும் முக்கியம், ஏனெனில் சீசன் செய்யப்படாத தவாவில் மாவு’ ஒட்டிக்கொள்ளும்.

*வெங்காயத்தை பாதியாக வெட்டி, அதை எண்ணெயில் தோய்த்து, தவாவில் தடவவும். அது சூடாகட்டும். தவா இப்போது சீசன் செய்யப்பட்டு விட்டது.

*வெங்காயத்திற்குப் பதிலாக மஸ்லின் துணியையும் பயன்படுத்தலாம். மஸ்லின் துணியை பயன்படுத்தி இரும்பு தவாவின் மீது எண்ணெயைத் தடவி, தவாவை சூடாக்கவும்.

அடுத்தமுறை நீங்கள் இரும்புத் தவாவை பயன்படுத்தும் போது மறக்காமல் இந்த குறிப்புகளை நினைவில் கொள்ளுங்கள்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Kitchen hacks iron cookware maintenance tips

Best of Express