கிச்சனில் நாம் எவ்வளவு தான் கவனமாக வேலை செய்தாலும், பால் காய்ச்சும் போது, அது பொங்கி கீழே விழுவது மட்டும் நம்மால் தடுக்கவே முடியாது. ஒவ்வொரு முறையும் பால் பொங்கும் வரை பக்கத்தில் நின்றாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் அது கொதித்து கீழே சிந்தி அடுப்பு முழுவதும் நாசமாகிவிடும்.
அதேப்போல அவசரத்தில், தீயை அதிகமாக வைத்து பால் காய்ச்சும் போது, அது பாத்திரத்தில் அடிப்பகுதியில் லேசாக ஓட்டிக் கொள்ளும். அதை ஸ்க்ரப் செய்து, சுத்தம் செய்வது அதைவிட பெரிய வலி.
பிரபல செஃப் அனன்யா பானர்ஜி உங்களுக்காகவே சில குறிப்புகளை இங்கு பகிர்ந்துள்ளார்.
பாலில் புரதங்கள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள் உள்ளன, தீ அதிகமாகவோ அல்லது சீரற்றதாகவோ இருந்தால் அவை கடாயின் அடிப்பகுதியில் ஒட்டிக்கொள்ளும். அதிக தீயில் பாலை காய்ச்சினால், அது விரைவில் கருகிவிடும்.
பால் தண்ணீரை விட குறைந்த வெப்பநிலையில் கொதிக்கிறது, எனவே அதற்கு அதிக வெப்பம் தேவையில்லை. தொடர்ந்து கிளறவில்லை என்றால் பாலில் உள்ள இயற்கை சர்க்கரைகள், குறிப்பாக லாக்டோஸ், கடாயின் அடிப்பகுதியில் ஒட்டிக்கொள்ளும்.
பால் கருகி போகாமல் இருக்க குறைந்த அல்லது மிதமான தீயில் சூடாக்கவும். அதிக தீயை தவிர்க்கவும். பாலை சூடாக்கும் போது தொடர்ந்து கிளறவும், அது அடிப்பகுதியியில் ஒட்டிக்கொள்வதை தடுக்கிறது, என்று பானர்ஜி கூறினார்.
அவர் பரிந்துரைத்த மற்றொரு சிறந்த ஹேக், பால் சேர்ப்பதற்கு முன் சிறிது தண்ணீரை (சுமார் 1-2 டேபிள்ஸ்பூன்) பானில் சேர்க்கவும். இது ஒரு பஃபர் லேயர் உருவாக்கி, எரிவதைத் தடுக்கலாம்..
ஸ்டெயின்லெஸ் பாத்திரத்தில் இந்த ஹேக் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதே வேளையில், வேறு எந்த பாத்திரத்தில் பாலை கொதிக்க வைக்கும் போதும் இதை நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும், பேஸ்டுரைஸ் பாலை கொதிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் பால் சுவை மற்றும் அமைப்பில் மாறி அதன் ஊட்டச்சத்து நன்மைகளை இழக்கக்கூடும் என்று உணவியல் நிபுணர் ஜி சுஷ்மா கூறினார். (clinical dietician at CARE Hospitals, Banjara Hills, Hyderabad)
யாராவது லாக்டோஸ் அலர்ஜி அல்லது பலவீனமான குடலால் அவதிப்பட்டாலோ, பேஸ்டுரைஸ் பாலைத் தேர்ந்தெடுப்பதே சிறந்த வழி என்று அவர் மேலும் கூறினார்.
Read in English: Often end up with a burnt saucepan after boiling milk? We’ve got you covered
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“