உருளைக் கிழங்கு எப்படி சமைத்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். வேகவைத்த உருளைக்கிழங்கு, பல விதமான சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
Advertisment
உருளைக் கிழங்கு வேக வைக்க
ஒரு கடாயில் பாதியளவு தண்ணீர் நிரப்பி அதிக தீயில் வைக்கவும். தண்ணீர் கொதி நிலைக்கு வந்தபிறகு, அடுப்பை மிதமாக குறைக்கவும்.
இப்போது இரண்டு உருளைக்கிழங்கை எடுத்து தோலுரிக்கவும். தோலுரித்த உருளைக்கிழங்கைக் கழுவி கொதிக்கும் நீரில் போடவும்.
கடாயை மூட வேண்டாம், உருளைக்கிழங்கை சுமார் 15-20 நிமிடங்கள் கொதிக்க விடவும். உருளைக்கிழங்கு நன்றாகச் சமைத்திருக்கிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்க உருளைக்கிழங்கை ஒரு முட்கரண்டி கொண்டு குத்தவும்.
கடாயிலிருந்து வேகவைத்த உருளைக்கிழங்கை எடுத்து, நீங்கள் விரும்பும் முறையில் அவற்றை சமைக்கலாம்.
அதேபோல உருளைக்கிழங்கை வேகவைக்கும் போது, கத்தி கொண்டு உருளைக்கிழங்கை கீறிவிடுங்கள் அல்லது குத்துங்கள். துளைகளின் வழியே வெப்பம் ஊடுருவி உருளைக்கிழங்கு சிறிது நேரத்தில் மென்மையாக்க உதவும்
சுவையான உருளைக்கிழங்கு ஃபிரை செய்யும் போது அதில் சிறிது சோம்பை, தூளாக்கி தூவினால் நல்ல வாசனையுடன் இருக்கும். அதேபோல, உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது, அரைக்கரண்டி புளிப்பு இல்லாத தயிர் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“