Advertisment

பேக்கிங் செய்யும் போது வெண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்க்கலாமா?

"வெண்ணெயில் அதிக ஈரப்பதம் உள்ளது மற்றும் பெரும்பாலான சமையல் குறிப்புகள் இந்த உண்மையை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளன"

author-image
WebDesk
New Update
Kitchen hacks

Kitchen hacks Shall we replace butter with ghee while baking

கடந்த சில ஆண்டுகளாக’ பேக்கிங் மிகவும் பிரபலமான பொழுதுபோக்குகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்த தொற்றுநோய் காலத்தில்’ நீண்ட கால லாக்டவுன் மற்றும் தனிமைப்படுத்தல் ஆகியவை எளிதான, பேக்கிங் ரெசிபிகளை பரிசோதிக்க வழிவகுத்தன. ஆனால், உங்கள் அடுத்த பேக்கிங் பயணத்தில்’ சில பொருட்களை மாற்ற நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஒருவேளை, நெய்க்கு பதிலாக வெண்ணெய்?

Advertisment

பதில் ஆம் எனில், சமையல் கலைஞர் மேக்னா உங்களுக்காக சில நடைமுறை ஆலோசனைகளை வழங்குகிறார். "வெண்ணெயில் அதிக ஈரப்பதம் உள்ளது. பெரும்பாலான சமையல் குறிப்புகள் இந்த உண்மையை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளன" என்பதால் இரண்டையும் மாற்ற வேண்டாம் என்று அவர் கடுமையாக பரிந்துரைக்கிறார்.

இன்ஸ்டாகிராம் வீடியோவில்’ இரண்டு பொருட்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை அவர் விளக்கினார்.

"நெய்க்கு பதிலாக வெண்ணெய் பயன்படுத்துவதை நான் பரிந்துரைக்க மாட்டேன், ஏனெனில் அவற்றின் பண்புகள் மிகவும் வேறுபட்டவை. வெண்ணெயில் அதிக ஈரப்பதம் உள்ளது, அதே சமயம் நெய் செறிவூட்டப்பட்ட கொழுப்பாகும். வெண்ணையை கடைந்து நெய் தயாரிக்கப்படுவது தான் இதற்கு காரணம். அதனால் தான் நெய்யில் ஈரப்பதம் இல்லை. பேக்கிங்கில் நெய் போன்ற திடக் கொழுப்பைப் பயன்படுத்தினால், மற்ற பொருட்களில் மாற்றம் தேவைப்படும்”.

publive-image

வெண்ணெய்

பெரும்பாலான இனிப்பு பேக்கிங் ரெசிபிகளில், வெண்ணெய் உண்மையில் ஒரு சிறந்த அங்கமாகும். பேக்கிங்கில் முக்கிய அம்சமாக இருக்கும் வெண்ணெய்யை’ நெய் அல்லது தெளிந்த வெண்ணெய் கொண்டு மாற்ற முடியுமா என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள்.

இந்திய உணவுகளில் ஏராளமாகப் பயன்படுத்தப்படும் நெய்’ ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தின் சிறந்த மூலமாகும்.

ஆயுர்வேத மருத்துவர் ஐஸ்வர்யா சந்தோஷ் இந்த கொழுப்பின் சில நன்மைகளை பட்டியலிட்டுள்ளார்.

நெய் அறிவாற்றல், நினைவாற்றல், செரிமானம், வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி, நீண்ட ஆயுள், பார்வை, ஆண்மை ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இது அனைத்து வெளிப்புற கொழுப்புகளிலும் சிறந்தது. இது இயற்கையில் புத்துணர்ச்சியூட்டுகிறது.

நெய் ஒரு லுப்ரிகேட்டிங் (lubricating) முகவராக செயல்படுகிறது, இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது.

எனவே நெய்’ நமக்குப் பிடித்தமான உணவுகள் மற்றும் இனிப்புகளில் பயன்படுத்தப்படலாம் என்றாலும், புதிய பேக்கிங் சாகசங்களை மேற்கொள்ளும்போது நெய் அல்லது தெளிந்த வெண்ணெயைத் தவிர்ப்பது நல்லது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment