உருளைக்கிழங்கு சீக்கிரமே முளைவிட்டு வீணாகிறதா? அவற்றை நீண்ட நாள் சேமிக்க செஃப் சொல்லும் மந்திரம் என்ன?

“அவற்றை எப்படி சரியாக சேமிப்பது என்று உங்களுக்குத் தெரிந்தால், அவை வாரங்கள் அல்லது சில மாதங்கள் கூட புதியதாக இருக்கும்” என்று செஃப் கூறுகிறார்.

உருளைக்கிழங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் நீண்ட காலம் சேமித்து வைக்கும்போது, ​​அவை புத்துணர்ச்சியை இழந்து, படிப்படியாக முளைக்கத் தொடங்கும்.

உருளைக்கிழங்கை நீண்ட நாள் சேமிக்க நீங்கள் சில எளிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். செஃப் குணால் கபூர் இன்ஸ்டாகிராம் பதிவில் சில குறிப்புகள் மற்றும் தந்திரங்களைப் பகிர்ந்துள்ளார்.

“உங்களுக்குத் தெரியுமா உருளைக்கிழங்கு மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை விட நீண்ட காலம் நீடிக்கும்? ஆனால் இறுதியில், அவை பச்சை தளிர்களை முளைக்க ஆரம்பித்து, அவற்றின் புத்துணர்ச்சியையும் சுவையையும் இழக்கின்றன. அவற்றைச் சரியாகச் சேமிப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரிந்தால், அவை வாரக்கணக்கில் அல்லது சில மாதங்கள் கூட புதியதாக இருக்கும்.

உருளைக்கிழங்கை எப்படி வாங்குவது மற்றும் சேமிப்பது என்பது குறித்து இதோ செஃப் பரிந்துரைக்கும் சில குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் இங்கே உள்ளன!

* உருளைக்கிழங்கை குளிர்ந்த, நன்கு காற்றோட்டமான இடத்தில் சேமிக்கவும்.

*பிரிட்ஜ் போன்ற குளிர்ந்த வெப்பநிலை, உருளைக்கிழங்கின் மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுவதற்கு காரணமாகிறது, இதன் விளைவாக இனிப்பு சுவை மற்றும் சமைக்கும் போது நிறமாற்றம் ஏற்படுகிறது.

*அதிக வெப்பநிலையை அடையும் அல்லது அதிக சூரிய ஒளி பெறும் பகுதிகளில் உருளைக்கிழங்குகளை வைப்பதை தவிர்க்கவும். எப்போதும் குளிர்ந்த இருண்ட பகுதியில் சேமிக்கவும்.

*துளையிடப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் காகிதப் பைகளில் உருளைக் கிழங்கை சேமிப்பது அதன் ஆயுளை நீட்டிக்க சிறந்த சூழலை வழங்குகின்றன.

*உருளைக்கிழங்கை சேமிப்பதற்கு முன் கழுவ வேண்டாம். ஈரப்பதம் ஆரம்பகால கெடுதலை ஊக்குவிக்கிறது.

*உருளைக்கிழங்கின் தோலில் பச்சையாக இருப்பது சோலனைன் என்ற வேதிப்பொருள். உருளைக்கிழங்கு அதிக வெளிச்சத்தில் வைக்கும்போது ஏற்படும் இயற்கையான எதிர்வினை இது.

*சோலனைன் கசப்பான சுவையை உருவாக்குகிறது மற்றும் அதிக அளவில் சாப்பிட்டால் நோயை உண்டாக்கும்.

*சிறிதளவு பச்சையாக இருந்தால், சமைத்து சாப்பிடும் முன் உருளைக்கிழங்கின் தோலின் பச்சைப் பகுதிகளை வெட்டிவிடவும்.

*முளைகள்’ உருளைக்கிழங்கு வளர முயற்சிக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். உருளைக்கிழங்கை நன்கு காற்றோட்டமான, உலர்ந்த, இருண்ட இடத்தில் சேமித்து வைப்பது முளைப்பதைக் குறைக்கும்.

*உருளைக்கிழங்கை சமைப்பதற்கு முன் அல்லது சாப்பிடுவதற்கு முன் முளைகளை வெட்டிவிடவும்.

அடுத்த முறை உருளைக்கிழங்கு வாங்கும்போது இவற்றை முயற்சித்து பாருங்கள்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kitchen hacks simple tips to make potatoes last longer

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com