ஆண்டு முழுவதும் மாம்பழம் சாப்பிட ஆசையா? நீண்ட நாள் பழங்களை சேமிக்க சிம்பிள் டிப்ஸ் இதோ!

நீங்கள் ஆண்டு முழுவதும் மாம்பழங்களை அனுபவிக்க விரும்பினால், சுவையான பழங்களை சேமிக்க 3 முறைகள் இங்கே உள்ளன.

நீங்கள் ஆண்டு முழுவதும் மாம்பழங்களை அனுபவிக்க விரும்பினால், சுவையான பழங்களை சேமிக்க 3 முறைகள் இங்கே உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆண்டு முழுவதும் மாம்பழம் சாப்பிட ஆசையா? நீண்ட நாள் பழங்களை சேமிக்க சிம்பிள் டிப்ஸ் இதோ!

மாம்பழம் சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்’ பழத்தின் சுவையை அதிகம் விரும்பினாலும், மாம்பழங்கள் சில மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

Advertisment

உங்களுக்கு ஆண்டு முழுவதும் மாம்பழம் சாப்பிட ஆசையாக இருக்கிறதா? இங்கே’ பழுத்த மாம்பழங்களை ஃபிரிட்ஜில் சேமிக்க மூன்று எளிய வழிகள் உள்ளன:

மாம்பழத்தை துண்டுகளாக சேமிக்கவும்

மாம்பழத்தை துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் சேமிக்கலாம். இதற்கு முதலில் மாம்பழத்தை உரித்து’  பின்னர் பெரிய துண்டுகளாக நறுக்கவும். இப்போது ஒரு தட்டில் மாம்பழத் துண்டுகளைப் போட்டு, அதன் மீது சிறிது சர்க்கரைப் பொடியைப் பரப்பவும். பிறகு, தட்டை 2-3 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். இப்போது இந்த மாம்பழத் துண்டுகளை ஒரு ஜிப் லாக்–உடன் கூடிய பாலித்தீன் பையில் வைத்து’ நீங்கள் விரும்பும்போது எடுத்து சாப்பிடலாம்.

Advertisment
Advertisements
publive-image

மேங்கோ பல்ப்

மாம்பழங்களை நீண்ட நேரம் சேமிக்க நீங்கள் மற்றொரு முறையைப் பயன்படுத்தலாம். இதற்கு மாம்பழத்தின் கூழ் எடுத்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இப்போது அதை ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கண்ணாடி பாட்டிலில் நிரப்பி சேமிக்கவும். வேண்டுமானால் பெரிய பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளலாம். இதை வைத்து எளிதாக மாம்பழ ஷேக் அல்லது ஐஸ்கிரீம் செய்யலாம்.

மேங்கோ ஐஸ் கியூப்

மேலே கூறிய முறைகள்’ உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அல்லது உங்கள் ஃபிரிட்ஜில்’ இடப்பற்றாக்குறை இருந்தால், நீங்கள் மாம்பழத்தில் கூழ் செய்து’ ஐஸ் ட்ரேயில் நிரப்பலாம்.  வேண்டுமானால்’ இந்த துண்டுகளை ஒரு ஜிப் லாக் பாலீத்தின் பையில் போட்டு ஃப்ரீசரில் வைக்கலாம். பாலிதீனில் காற்று இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: