/tamil-ie/media/media_files/uploads/2022/03/tomato759-1.jpg)
This five kitchen ingredients gives taste of tomato
தக்காளி வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்பு, ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். மேலும் இது, புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களைத் தடுக்க உதவுகிறது. தக்காளியில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், தினமும் தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்வது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
தக்காளியில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் சில நேரங்களில் சமைக்கும் போது, வீட்டில் இருக்காது. கடைக்கு சென்று வாங்கவும் நேரம் இருக்காது. அல்லது சில நேரங்களில் தக்காளி விலை, தங்கத்துக்கு நிகராக உயர்ந்து விடும். அந்த மாதிரி சமயங்களில், தக்காளிக்கு பதிலாக, இந்த உணவுப் பொருட்கள் உங்களுக்கு உதவும்.
மாங்காய் தூள்
/tamil-ie/media/media_files/uploads/2022/03/mango759.jpg)
இது தக்காளியைப் போல சுவை உடையது, மேலும் இது மலிவானது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் கறியில் ஒரு டீஸ்பூன் அல்லது தேவையான அளவு மாங்காய் தூள் சேர்த்தால் போதும். பச்சை மாங்காயும் சேர்க்கலாம்.
புளி
தக்காளிக்குப் பதிலாக நீங்கள் பயன்படுத்தக்கூடிய மற்றொரு மூலப்பொருள் புளி.. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், சிறிது புளியை 15-20 நிமிடங்கள் ஊறவைத்து, கூழ் பிரித்தெடுத்து விதைகளை அகற்றவும். சிறிது தண்ணீர் சேர்த்து வடிகட்டி, உங்கள் கறிகளில் சேர்க்கவும். புளி கறியை கெட்டியாக்கவும் உதவுகிறது, எனவே பரிமாறும் முன் உங்கள் உணவின் நிலைத்தன்மையை சரிபார்க்கவும்.
நெல்லி
/tamil-ie/media/media_files/uploads/2022/03/amla-GettyImages-543458632.jpg)
தக்காளிக்குப் பதிலாக புதிய நெல்லிக்காயையும் பயன்படுத்தலாம், ஆனால் அது சற்று புளிப்பாகவும் இருக்கும், எனவே கறியில் சேர்க்கும்போது அளவு குறித்து கவனமாக இருங்கள். சர்க்கரையுடன் தண்ணீரில் ஊறவைக்க பரிந்துரைக்கப்படுகிறது, பிறகு எந்த கறியிலும் சேர்க்கவும்,
சுரைக்காய்
/tamil-ie/media/media_files/uploads/2022/03/ash-gourd_1200_pixabay.jpg)
நீங்கள் தக்காளிக்குப் பதிலாக சுரைக்காய் சேர்க்கலாம். ருசியுடன் எந்தப் பொருத்தமும் இல்லை என்றாலும், சரியான சுவையை பெற, நீங்கள் அதனுடன் மாங்காய் தூள் அல்லது புளி’ ஏதேனும் ஒன்றை சேர்க்க வேண்டும்.
தயிர்
/tamil-ie/media/media_files/uploads/2022/03/GettyImages-1008860374-1.jpg)
தக்காளிக்கு பதிலாக, நீங்கள் சாதாரண தயிர் சேர்க்கலாம். தயிரின் அமிலச் சுவை மசாலாப் பொருட்களுடன் நன்றாகக் கலந்து உங்களுக்கு ஒத்த சுவையைத் தருகிறது. சுவையில் சரியானதாக இருக்க, 2-3 நாட்கள் பழமையான தயிர் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் அதன் சுவையில் சிறிது புளிப்பு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.