இப்போதெல்லாம் தொழில்முறை சமையல்காரர்கள், இணையத்தில் தங்களைப் பின்தொடர்பவர்களுக்குத் தங்கள் சிறந்த சமையல் ரகசியங்களைத் திறந்து வைத்திருக்கிறார்கள். சமையலறையைச் சுற்றி உங்கள் வாழ்க்கையை எளிதாக்க, நீங்கள் எப்போதும் சார்ந்து இருக்கக்கூடிய சில ஹேக்குகள் உள்ளன.
உங்கள் சமையல் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள இந்த ஹேக்குகள் மூலம், உங்களுக்கு ஏற்படக்கூடிய சமையல் பேரழிவுகள் அல்லது விபத்துக்களை நீங்கள் தவிர்க்கலாம், குறிப்பாக நீங்கள் சமைப்பதில் அல்லது சமையலறையைச் சுற்றி வேலை செய்வதில் மிகவும் திறமையானவராக இல்லாவிட்டால்.
சமையலறையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று பால் மற்றும் பால் சமைக்கும் போது அல்லது சேமிக்கும் போது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் சில பொதுவான ஹேக்குகள் உள்ளன.
பால் ஒரு முழுமையான உணவாக அறியப்படுகிறது, மேலும் இது இனிப்பு, காரம் என பலவகையான உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. பால் சுவையாகவும், கிரீமியாகவும் இருக்கிறது, மேலும் இதன் அதிகப்படியான சத்துக்கள் தான் இதை மிகவும் பிரபலமாக்குகிறது. இருப்பினும், பால் மிகவும் கெட்டுப்போகும் தன்மை உடையது, நீங்கள் அதை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.
நீங்கள் பால் சமைக்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய குறிப்புகள்!
பால் கொதிக்கும்போது பிடித்து விடுகிறதா?
கொதிக்கும் போது பால் பிடிப்பதைத் தடுப்பதற்கான எளிதான வழி, தொடக்கத்தில் சிறிது தண்ணீர் சேர்க்க வேண்டும். உங்கள் பாத்திரத்தில் பாலை ஊற்றுவதற்கு முன், பாத்திரம் பிடிப்பதை தடுக்க அல்லது ஒட்டாமல் இருக்க, அதன் அடிப்பகுதியை நனைக்கலாம்.
பாலை கெட்டுப் போகாமல் காப்பாற்ற
பால் கெட்டுப் போகாமல் இருக்க, அதை சரியாக குளிரூட்டவும். பால் புதியதாக இருக்கும் போது கொதிக்க வைக்கவும், மேலும் அதன் ஆயுளை அதிகரிக்க, ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன், அதை குளிர்விக்க அனுமதிக்கவும்.
பால் திரிவதை தடுக்க
நீங்கள் பாலை வெளியே மறந்து வைத்துவிட்டாலும் அல்லது குளிரூட்ட மறந்தாலும் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நீங்கள் இன்னும் அதை சேமிக்க முடியும்! நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், பால் கொதிக்கும் முன் ஒரு சிட்டிகை சமையல் சோடாவை சேர்க்கவும். இதனால் பால் திரியாது.
கொதிக்கும் போது பால் கசிவதைத் தடுக்க
பால் கொதித்து வீணாவதைத் தடுக்க பாத்திரத்தின் மேல் ஒரு மரக் கரண்டியை வைக்கவும். அது நிரம்பி வழிவதைத் தடுக்க உதவும். இது பாலுக்கு மட்டுமில்லை. வேறென்ன பொருட்களை கொதிக்க வைத்தாலும் இந்த தந்திரம் வேலை செய்யும்.
நீங்கள் அடுத்தமுறை பால் சமைக்கும்போது, இந்த தந்திரங்களை பயன்படுத்தி உங்கள் பாலை வீணாகாமல் காப்பாற்றுங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.