தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை காற்று போகாத இடங்களிலும் பாத்திரங்களிலும், உலர்ந்த இடங்களிலும் சேமித்து வைப்பது பற்றி நாம் பள்ளிக்கூடங்களையே படித்திருப்போம்.
ஈரமான கைகளால் அரிசியைத் தொடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளோம். இன்னும், எல்லா வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், அவை பூச்சிகளால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் கெடுக்கின்றன.
நீங்களும் இதே சிக்கலை எதிர்கொண்டால், அரிசி மற்றும் பிற தானியங்களை கிருமிகள் மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க உதவும் சில எளிய சமையலறை ஹேக்குகள் பார்க்கலாம்.
பிரியாணி இலைகள்:
புழுக்கள் மற்றும் வண்டுகளைப் போக்க இது சிறந்த மருந்துகளில் ஒன்றாகும். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் 4-6 பிரியாணி இலைகளை வைக்கவும். இதன்மூலம், மாசுபடுவதைத் தவிர்க்கவும் மற்றும் அரிசி வைத்திருக்கும் பாத்திரங்களில் காற்று நுழையாத வண்ணம் பாதுகாக்கலாம்.
கிராம்பு:
கிராம்பின் வலுவான நறுமணம் பூச்சிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் தொற்றுநோயைத் தவிர்க்க உதவுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, சமையலறையில் கிருமிகள் இல்லாமல் இருக்க கிராம்பு எண்ணெயை ஸ்ப்ரேயாகவும் பயன்படுத்தலாம்.
குளிர்சாதன பெட்டி
அரிசியை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், இது அனைத்து பூச்சிகளையும் கொல்ல உதவும், பின்னர் நீங்கள் அரிசியை அறை வெப்பநிலையில் காற்று போகாத பாத்திரங்களில் சேமித்து வைக்கலாம்.
பூண்டு
அரிசி பாத்திரத்தில். உரிக்காத பூண்டையும் போட்டு வைக்கலாம், அவற்றைச் சரிபார்த்து, அவை உலர்ந்தவுடன் அவற்றை மாற்ற வேண்டும்.
சூரிய ஒளி
அரிசி ஏற்கனவே பூச்சிகள் மற்றும் வண்டுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை ஒரு தாளில் பரப்பி ஒரு நாள் சூரிய ஒளியின் கீழ் வைக்கவும். பின்னர் சுத்தமான, உலர்ந்த, காற்று போகாத பாத்திரத்தில் சேமித்து வைக்கவும்.
சமையலறையில் நேரடியாக சூரிய ஒளி படவில்லை என்றால், ஒவ்வொரு 1- 2 மாதங்களுக்குப் பிறகு, அரிசி மற்றும் பிற தானியங்கள் மற்றும் பருப்புகளை வெயிலில் வைப்பதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil