/tamil-ie/media/media_files/uploads/2022/02/cooking_759_-1.jpg)
Kitchen hacks Unknown cooking hacks from culinary schools
சிறுவயதில் கிச்சன் ஸ்லாப்பில் அமர்ந்து அம்மா சமைப்பதைப் பார்த்தது நினைவிருக்கிறதா? நம்மில் பெரும்பாலோர் சமையல் கற்றுக்கொண்டது அப்படித்தான். இன்று, நாம் அதை வெவ்வேறு நவீன வழிகளில் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். ஒரு சிலர் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து சமைக்க முயற்சி செய்கிறார்கள் மற்றும் சிலர் இணையத்தில் இருந்து சமையல் குறிப்புகளைப் பார்க்கிறார்கள்.
நீங்களும் அதில் ஒருவரா? அப்படியானால் இது உங்களுக்குத்தான். சிறந்த சமையல் பள்ளிகளில் மட்டுமே கற்பிக்கப்படும் சில ரகசிய குறிப்புகள் இங்கே உள்ளன. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!
சரியான வறுத்த முட்டைக்கு
ஒவ்வொறுமுறை சமைக்கும் போதும், வறுத்த முட்டைகள் உங்கள் கடாயில் ஒட்டிக்கொண்டிருக்கிறதா? ஆம் எனில், இந்த உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சரியான வறுத்த முட்டையைப் பெறுவதற்கான சிறந்த வழி, கடாயை சூடாக்கி, அதில் சிறிது வெண்ணெய் சேர்த்து, பின்னர் முட்டையைச் சேர்ப்பதாகும். முட்டையை ஒருபோதும் குறைந்த அல்லது அதிக சூடான பாத்திரத்தில் சேர்க்க வேண்டாம்.
பர்ஃபெக்ட் தோசைக்கு
/tamil-ie/media/media_files/uploads/2022/02/dosa-pexels-1.jpg)
தோசை சுடும்போது நீங்கள் அடிக்கடி சந்திக்கும் இரண்டு பெரிய பிரச்சனை’ மிருதுவாக இல்லாதது அல்லது தோசை பிய்ந்து போவது. நீங்கள் தயாரிக்கும் மாவில் சிறிது புளிப்பு கிரீம் சேர்த்தால்’ தோசை மிருதுவாக பஞ்சுபோல வரும்.
சுவையான கறிக்கு
உங்கள் மசாலாப் பொருட்களை ஒரு உலர்ந்த பாத்திரத்தில் குறைந்த தீயில் போட்டு வறுக்கவும். இதனால் அதன் சுவையும், மனமும் இன்னும் அதிகமாகும். அதை கறியில் சேர்க்கும் போது சிறந்த சுவையைத் தரும்.
உங்கள் இறைச்சியில்’ கூடுதல் எண்ணெய் சேர்க்காமல் சமைக்க முடியும் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் கடாயை சூடாக்கி, ஒரு பக்கத்தில் மாமிசத்தைச் சேர்க்கவும், இதனால் கொழுப்பு வெளியேறும் மற்றும் அதிகப்படியான எண்ணெய் இல்லாமல் இறைச்சி அவற்றின் கொழுப்பில் சமைக்கப்படும்.
பஞ்சுபோன்ற மேஷ்டு உருளைக்கிழங்கு
நீங்கள் கிரீம் மேஷ்டு உருளைக்கிழங்கு விரும்பினால், வேகவைத்த உருளைக்கிழங்கை ஒரு வாணலியில் குறைந்த தீயில் உலர வைக்கலாம், இதனால் கொதித்த பிறகு மீதமுள்ள தண்ணீர் ஆவியாகிவிடும்.
ஆனால் அவற்றை வறுக்காதபடி கவனமாக செய்யுங்கள். பஞ்சுபோன்ற கிரீமி உருளைக்கிழங்கு கிடைக்கும்.
அடுத்தமுறை சமைக்கும்போது மறக்காமல், இந்த குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.