Use these kitchen tricks to make your cooking easier
சமையலறை வேலையை எளிதாக்குவதன் மூலம் நேரத்தையும், முயற்சியையும் சேமிக்க விரும்பினால், உங்களுக்காக சில சிம்பிள் ஹேக்ஸ் எங்களிடம் உள்ளது.
Advertisment
சமையலறையில் வேலை செய்வது பார்க்க எளிமையாக தோன்றலாம், ஆனால் அது அலுவலகத்தில் வேலை செய்வது போல சவாலானது.
பல சமையலறை வேலைகள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். எனவே, சமையலறை வேலையை எளிதாக்குவதன் மூலம் நேரத்தையும், முயற்சியையும் சேமிக்க விரும்பினால், உங்களுக்காக சில எளிதான ஹேக்ஸ் இங்கே உள்ளது.
ஹேக்ஸ் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!
Advertisment
Advertisements
பூண்டு உரிக்க!
நம் உணவில் பூண்டு எப்போதும் இருக்கும். பெரும்பாலும் தோலுரித்த பின்னரே இது பயன்படுத்தப்படுகிறது. சில சமயங்களில், இதைச் செய்வது எளிதான காரியம் அல்ல. எளிதாக பூண்டு தோல் உரிக்க’ முதலில், பூண்டு பற்களை பிரித்து ஒரு டப்பர்வேரில் போட்டு, மூடியை மூடி, சிறிது நேரம் குலுக்கவும். இப்படி செய்வதால் பூண்டிலிருந்து’ தோல் எளிதாக பிரிந்து விடும். இந்த முறை வேலையை எளிதாக்குவது மட்டுமல்லாமல் நேரத்தை மிச்சப்படுத்தும்.
எலுமிச்சை சாறு!
எலுமிச்சை சாறு’ நம் வீடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சம்பழத்தில் இருந்து முழு சாற்றையும் கெட்டியாகப் பிழிந்து பயன்படுத்த விரும்பினால், அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்க்கவும், பின்னர் எலுமிச்சையை மைக்ரோவேவில் 20 விநாடிகள் வைக்கவும். அதன் பிறகு, பிழிந்தால், எலுமிச்சைச் சாறு அனைத்தும் எளிதில் வெளியேறும்.
வாழைப்பழம் சேமிக்க!
நமக்கு மிகவும் பிடித்த பழங்களில் வாழையும் ஒன்று, ஆனால் அவற்றை சேமிப்பது கடினம். சீக்கிரம் கெட்டுப் போய்விடும். நீங்கள் வாழைப்பழங்களை நீண்ட நாள் வைத்திருக்க விரும்பினால், வாழைப்பழத்தின் மேல் முனையை கிளிங் ஃபிலிமில் சுற்றி வைக்கவும். இதனால், வாழைப்பழம் விரைவில் பழுக்காமல் இருக்கும்.
பிளேன் ஐஸ் கட்டி!
பார்ட்டி, ரெஸ்டாரண்ட்களில், டிரான்ஸ்பாரன்ட் ஐஸ் கட்டிகள் உங்கள் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். நீங்களும் வீட்டில்’ டிரான்ஸ்பாரன்ட் ஐஸ் கட்டிகளை உருவாக்க விரும்பினால், சாதாரண நீருக்கு பதிலாக வேகவைத்த தண்ணீரைப் பயன்படுத்துங்கள். இது டிரான்ஸ்பாரன்ட் ஐஸ் கட்டிகளை உருவாக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “