Advertisment

ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பளபளக்க, உருளைக் கிழங்கு கழுவ, காப்பர் பாத்திரம் சுத்தம் செய்ய.. சிம்பிள் கிச்சன் ஹேக்ஸ் இங்கே!

உங்கள் சமையலறைக்குச் செல்வதற்கு முன் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே உள்ளன.

author-image
WebDesk
New Update
Cooking Hacks

Kitchen Hacks Use this simple tips to save time in your kitchen

சிறுவயதில் கிச்சன் ஸ்லாப்பில் அமர்ந்து அம்மா சமைப்பதைப் பார்த்தது நினைவிருக்கிறதா? நம்மில் பெரும்பாலோர் சமையல் கற்றுக்கொண்டது அப்படித்தான். இன்று, நாம் அதை வெவ்வேறு நவீன வழிகளில் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். நீங்களும் அதில் ஒருவரா? அப்படியானால் இது உங்களுக்குத்தான்.

Advertisment

உங்கள் சமையலறைக்குச் செல்வதற்கு முன் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே உள்ளன. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

பொங்குவதை தடுக்க மரக்கரண்டி

உங்கள் பானைகளில் ஏதேனும் கொதித்துக்கொண்டிருந்தால், விரைவாக ஒரு மரக் கரண்டியை விளிம்பின் குறுக்கே வைக்கவும் - அது நுரைத்த குமிழ்களை அடக்கி, அதிக கொதிநிலையைத் தடுக்கும்.

ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பளபளக்க

உங்கள் கிச்சனில் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பொருட்களை சுத்தம் செய்ய ஆல்கஹால் பயன்படுத்தவும்.

டிஷ்வாஷர் மூலம் உருளைக்கிழங்கை கழுவவும்

உண்மையாக, இது உங்கள் அழுக்கு காய்கறிகளை சுத்தம் செய்வதற்கான ஒரு ஈஸியான வழி. இயந்திரத்தில் சோப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

காப்பர் பாத்திரத்தை சுத்தம் செய்ய கெட்ச்அப்

ஒரு துணியில் சிறிது கெட்ச்அப் எடுத்து, அதை உங்கள் காப்பர் பாத்திரம் முழுவதும் தேய்க்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் புதியது போல் இருக்கும்.

ஸ்பாஞ்சை மைக்ரோவேவ் செய்யவும்

நீங்கள் பாத்திரம் கழுவும், ஸ்பாஞ்ச் தோற்றத்தில் சரிசெய்ய முடியாத அளவுக்கு இருக்கும்போது, அதை மைக்ரோவேவ் செய்து’ பழையநிலைக்கு கொண்டுவரலாம்.

குழப்பத்தை குறைக்க குக்கிங் ஸ்ப்ரே

சூப்பர் ஸ்டிக்கி பொருட்களை அளவிடும் போது, ஒட்டுவதை தவிர்க்க ​​முதலில் உங்கள் மெஷர்மண்ட் கப்பில் குக்கிங்  ஸ்பிரே பயன்படுத்தவும். இதனால் அவை கப்பில் ஒட்டாமல் இருக்கும்.

அடுத்தமுறை சமைக்கும் போது மறக்கமா இந்த கிச்சன் ஹேக்ஸை கண்டிப்பா டிரை பண்ணுங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment