முட்டை ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் சிறந்தது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உண்மை. ஆனால் முட்டை மற்றும் ஓட்டின் இன்னும் பல நன்மைகள் உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஆர்வமாக இருந்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே.
உரம்

முட்டை ஓடுகளில் கால்சியம் நிறைந்துள்ளது, இது உங்கள் தாவரங்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும். அதைத் தூக்கி எறிவதற்குப் பதிலாக, முட்டை ஓடுகளை சேமிக்கவும், பூச்சிகளைத் தடுக்கவும் பயன்படுத்தவும். இது உங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு சிறந்தது.
முதலுதவி
ஆம், நீங்கள் படித்தது சரிதான். முட்டையின் வெள்ளைக்கருவுக்கும், ஓடுக்கும் இடையே உள்ள மெல்லிய சவ்வு, சில சமயங்களில் முட்டையை வேகவைத்த பிறகு ஒட்டிக்கொண்டு, உங்களை வெறுப்படையச் செய்யும். இது சிறிய வெட்டுக்களுக்கும், கீறல்களுக்கும் சிறந்தது. இரத்தப்போக்கு நிறுத்த நீங்கள் அதை ஒரு பேன்டேஜ் ஆக டேபயன்படுத்தலாம்.
வெள்ளியை சுத்தம் செய்ய

வேகவைத்த முட்டையின் மஞ்சள் கரு உங்கள் வெள்ளி நகைகளுக்கு டி-ஆக்சிடிசராக செயல்படும் என்று நம்பப்படுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு கிண்ணத்தில் முட்டையின் மஞ்சள் கருவை உடைத்து’ அவற்றின் மீது சிறிது காகிதத்தை பரப்பவும்.
இப்போது நகைகளை’ முட்டையுடன் நேரடியாக ஒட்டாமல் வைக்க வேண்டும். கிண்ணத்தை ஒரு நாள் முழுவதும் மூடி வைக்கவும். நீங்கள் அவற்றை வெளியே எடுக்கும்போது, நாற்றத்தை அகற்ற நகைகளை சோப்புடன் கழுவவும்.
காபி பிளாஸ்க்கை சுத்தம் செய்ய

காபி பிளாஸ்கின் அனைத்து மூலைகளையும் வெறும் கைகளால் சுத்தம் செய்ய முடியாது. முட்டை ஓடுகளின் சிறிய துண்டுகளை – பிளாஸ்க் உள்ளே வைக்கவும். அடுத்து, உள்ளே சிறிது சூடான நீரை ஊற்றவும், மூடியை மூடி நன்றாக குலுக்கவும். சிறிது நேரத்தில், உங்கள் பிளாஸ்க் புதியதாகத் தோன்றும்.
அடுத்தமுறை முட்டை ஓடுகளை தூர எறிவதற்கு பதிலாக, அதிகபட்ச பயன்களுக்கு இப்படி பயன்படுத்துங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“