வீட்டில் சமையல் செய்யும் போதும் சமையலுக்காக வாங்கும் பொருட்களையும் எப்படி பாதுகாத்து வைக்கலாம் என்று சில டிப்ஸ்களை பார்க்கலாம்.
1. சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும்போது தண்ணீர் அதிகமாக போனால் இனி கவலை வேண்டாம். அதை ஒரு குக்கரில் போட்டு எண்ணெய் சேர்த்து கரண்டியை வைத்து மிதமான சூட்டில் கிளறி விட்டாலே போதும் மாவு எப்போதும் போல சாஃப்டாக கிடைக்கும்.
2. அரிசியில் வண்டு விழுந்தால் கை வைக்காமல் அதை சுத்தம் செய்வது எப்படி என்று பார்ப்போம். ஒரு சல்லடையில் அரிசியை போட்டு சலித்து எடுத்தால் அரிசியில் உள்ள வண்டு, புழுக்கள் எல்லாம் தனியாக வந்து விடும்.
3. முட்டையை வேகவைத்து உடைக்கும் போது அதில் இருக்கும் ஓடு ஈசியாக உடைந்து வருவதற்கு வேகவைத்த முட்டை ஒரு பாத்திரத்தில் ஐஸ்கட்டி தண்ணீரில் ஒரு ஐந்து நிமிடம் போட வேண்டும். பின்னர் முட்டை உடையாமல் ஓட்டை தனியாக பிரிக்கலாம்.
4. கருவேப்பிலை, கொத்தமல்லி தழைகளை காட்டன் பைகளில் போட்டு வைத்தால் காய்ந்து போகாமல் இருக்கும்.
5. அதேபோல எப்போதும் போல பூரியை கடாயில் சுடாமல் குக்கரில் எண்ணெய் ஊற்றி சுட்டால் பூரி சுடுவதற்கு எளிமையாக இருக்கும். எண்ணெய் தெறிக்கும் என்ற பயம் இருக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“