நீங்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை உங்கள் கிச்சன் கவுண்டரை சுத்தம் செய்து, அந்த அலமாரிகளை ஒழுங்கமைப்பது எல்லாம் சரிதான். ஆனால் அந்த பாத்திரங்களைக் கழுவும் ஸ்க்ரப்களை நீங்கள் அடிக்கடி மாற்றவில்லை என்றால், நீங்கள் நிறைய உடல்நலப் பிரச்சினைகளை அழைக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?
ஆனால் ஸ்க்ரப்பை எவ்வளவு அடிக்கடி நீங்கள் மாற்ற வேண்டும்? இந்தக் கேள்விக்கு இன்று விடையளிக்கிறோம்.
ஊட்டச்சத்து நிபுணர் அனன்யாவின் கூற்றுப்படி, உங்கள் கிச்சன் ஸ்க்ரப் மற்றும் ஸ்பாஞ்ச்களில் அதிக பாக்டீரியாக்கள் வாழ்வதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. உங்கள் கழிப்பறை இருக்கையை விட அவை அழுக்கானவை.
கிச்சன் ஸ்க்ரப் மற்றும் ஸ்பாஞ்ச் அதிக அளவு ஈ.கோலி மற்றும் பிற மல பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளன, பெரும்பாலும் அவை அடிக்கடி மாற்றப்படுவதில்லை, மேலும் காய்ந்து போவதில்லை.
நம்மில் பெரும்பாலோர் இதை குறைந்தது ஆறு மாதங்களுக்குப் பயன்படுத்துகிறோம், அதை ஒருபோதும் மாற்ற மாட்டோம், இந்த பாக்டீரியா லேசானது முதல் கடுமையான குடல் மற்றும் தோல் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும், என்று அவர் கூறினார்.
இதை ஒப்புக்கொண்ட டாக்டர் ஜி சினேகா (consultant, internal medicine, CARE Hospitals Banjara Hills) இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒருமுறை கிச்சன் ஸ்க்ரப்களை மாற்ற வேண்டும் என்றார்.
/indian-express-tamil/media/media_files/gARC0H2dAKguuSeS9Mat.jpg)
அவ்வாறு செய்யத் தவறினால், பாக்டீரியா பரவுவதன் மூலம் மாசு மற்றும் இரைப்பை குடல் தொற்று ஏற்படலாம். இந்த கிச்சன் ஸ்க்ரப்களில் உள்ள ஈரமான நிலை மற்றும் உணவின் நிலையான இருப்பு நோய்க்கிருமிகளை பரப்புகிறது, இது உணவுகள், பாத்திரங்கள் அல்லது மற்ற பரப்புகளில் பரவி தற்செயலாக அவற்றை உட்கொள்ளும் வாய்ப்புகளை அதிகரிக்கும், என்று டாக்டர் சினேகா மேலும் கூறினார்.
பாக்டீரியா வளர்ச்சியைக் குறைக்க அல்லது அகற்ற, அவர் பின்வருவனவற்றை பரிந்துரைத்தார்:
*உங்கள் ஸ்க்ரப்கள்/ஸ்பாஞ்சுகளை அடிக்கடி மாற்றவும்.
*ஸ்பாஞ்ச் 1-2 வாரங்கள் மற்றும் பிரஷ் 1-2 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்
*ஒவ்வொரு முறை கழுவிய பின் சுத்தம் செய்யவும்.
சூடான, சோப்பு நீரில் கழுவவும். ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு கழுவி வெயிலில் உலர விடவும்.
கிச்சன் ஸ்க்ரப்களை ப்ளீச் சொல்யூஷனில் 5 நிமிடம் ஊறவைப்பதாலோ அல்லது 1-2 நிமிடம் மைக்ரோவேவ் செய்வதாலோ பாக்டீரியாவை அழிக்க முடியும்.
உலர்ந்த இடத்தில் சேமிக்கவும். இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை விரைவாகப் பெருக்குவதைத் தடுக்க உதவுகிறது. டாக்டர் சினேகாவின் கூற்றுப்படி, ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் முன், ஸ்க்ரப்கள் ஏற்கனவே உலர்ந்திருப்பதை உறுதிப்படுத்தவும்.
ஈரமான ஸ்பாஞ்ச் மற்றும் ஸ்க்ரப்களை நீங்கள் ஒரு நிமிடம் மைக்ரோவேவ் செய்யலாம். டிஷ்வாஷரில் உங்கள் ஸ்க்ரப்கள்/ஸ்பாஞ்சை வைப்பதும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவும்.
குறிப்பு:
தேய்ந்த அல்லது துர்நாற்றம் வீசும் ஸ்க்ரப்களை அப்புறப்படுத்த வேண்டும் மற்றும் புதியவற்றை மாற்ற வேண்டும், டாக்டர் சினேகா மேலும் கூறினார்.
Read in English: Here’s how often you should replace kitchen sponges and brushes
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“