வாஷிங் மெஷின் க்ளீன் செய்யும் இந்தப் பவுடர்; முட்டை சீக்கிரம் கெடாமல் இருக்க இந்த ஆயில்: இப்படி செஞ்சு பாருங்க!
நமது வீட்டு வேலைகளை எளிதாக்கும் சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்களை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இவை நம் பணியை திறம்பட செய்து முடிக்க உதவியாக இருக்கும். மேலும், மற்ற வேலைகளில் நாம் கவனம் செலுத்த முடியும்.
நமது வீட்டு வேலைகளை எளிதாக்கும் சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்களை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இவை நம் பணியை திறம்பட செய்து முடிக்க உதவியாக இருக்கும். மேலும், மற்ற வேலைகளில் நாம் கவனம் செலுத்த முடியும்.
நம் கிச்சன் பணிகளை மிக எளிமையாக மாற்றக் கூடிய டிப்ஸ் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பலரும் சிந்திப்பார்கள். அதன்படி, சில பயனுள்ள டிப்ஸை தற்போது காணலாம்.
Advertisment
பாத்திரம் தேய்த்து கழுவும் திரவம் விரைவில் தீர்ந்து விடாமல், அதனை சுமார் ஒரு மாதம் வரை பயன்படுத்துவதற்கு ஒரு ட்ரிக் இருக்கிறது. அதன்படி, பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் திரவத்தை சுமார் 10 ஸ்பூன் அளவிற்கு ஒரு பாத்திரத்தில் தனியாக எடுக்க வேண்டும். இத்துடன் நாம் குடிக்கும் தண்ணீரை தேவையான அளவு சேர்த்து கலக்க வேண்டும். இதனை மற்றொரு பாட்டிலில் ஊற்றி வைத்து பாத்திரம் தேய்க்க பயன்படுத்தலாம். இதன் மூலம் நம் பணம் மிச்சமாகும்.
வெயில் காலத்தில் முட்டை வாங்கினால் அவை விரைவாக கெட்டுப் போகும் நிலையில் இருக்கும். ஆனால், இதனை நாம் சுலபமாக தடுக்க முடியும். அந்த வகையில், முட்டை மீது தேங்காய் எண்ணெய்யை சிறிதளவு தேய்த்து வைத்து விடலாம். இவ்வாறு செய்வதனால் அவ்வளவு சீக்கிரத்தில் முட்டை கெட்டுப் போகாமல் இருக்கும்.
நம் வீட்டில் மீன் உள்ளிட்ட அசைவ பொருட்களை வாங்கி சமைப்பதற்கு முன்பாக அவற்றை சுத்தப்படுத்துவோம். அதன் பின்னர், அந்த இடம் முழுவதும் ஈக்களுடன் இருக்கும். மேலும், துர்நாற்றமும் வீசும். இதனை தடுப்பதற்கு காபி பொடியை பயன்படுத்தலாம். ஒரு ஸ்பூன் அளவிற்கு காபி பொடியை எடுத்து அதனை சிறிது தண்ணீர் சேர்த்து கலந்த அந்தப் பகுதியில் தெளிக்கலாம். இதனால் துர்நாற்றம் வீசாமல் இருக்கும். இதையடுத்து அந்த இடத்தை தண்ணீர் ஊற்றி கழுவி விடலாம்.
Advertisment
Advertisements
வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் வாஷிங் மெஷினை சரியான முறையில் சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டியது அவசியம். அவ்வாறு செய்யும் போது தான் அவை நீண்ட நாட்களுக்கு ரிப்பேர் ஆகாமல் இருக்கும். இதற்காக ஒரு பொடியை தயாரித்து பயன்படுத்தலாம். ஒரு சிறிய பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் நாம் குளிக்க பயன்படும் சோப்பை இரண்டு ஸ்பூன் அளவிற்கு துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக இவற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பசை பதத்திற்கு மாற்ற வேண்டும். இதை சிறிய துண்டுகளாக பிரித்து ஃப்ரிட்ஜின் ஃப்ரீசர் பகுதியில் சுமார் 30 நிமிடங்களுக்கு வைக்க வேண்டும். இப்படி நாம் தயாரித்து வைத்திருக்கும் இந்தப் பொருளை பயன்படுத்தி வாஷிங் மெஷினை சுத்தம் செய்யலாம்.