Advertisment

வெங்காயம் வறுக்க, பால் காய்ச்ச, பீன்ஸ் வெட்ட.. மாஸ்டர் செஃப் கிச்சன் டிப்ஸ்

மாஸ்டர்செஃப் பங்கஜ் பதூரியா சமையலறையில் நேரத்தைச் சேமிக்க உதவும் சில குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.

author-image
WebDesk
Jan 16, 2023 16:38 IST
New Update
lifestyle

Kitchen Tips

சமைப்பது என்பது வாயில் நீர் ஊறவைக்கும் உணவுகளை தயாரிப்பது மட்டும் அல்ல, காய்கறிகளை வெட்டுவது முதல் பயன்படுத்தப்படும் பொருட்கள் புதியதாக இருப்பதை உறுதி செய்வது வரை பல விஷயங்கள் இதில் இருக்கிறது. வாழ்க்கையை மிகவும் எளிதாக்கும் சில ஹேக்ஸ் மற்றும் தந்திரங்களுடன் இந்த விஷயங்களுக்கு சில நிபுணத்துவம் தேவைப்படுகிறது. எனவே, மாஸ்டர்செஃப் பங்கஜ் பதூரியா சமையலறையில் நேரத்தைச் சேமிக்க உதவும் சில குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.

Advertisment

வெங்காயம் வறுக்க

publive-image

வெங்காயத்தை பொன்னிறமாக வறுக்க நேரம் எடுக்கும். ஆனால் இந்த உதவிக்குறிப்பைப் பயன்படுத்தி சிக்கலை தீர்க்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது ஒரு சிட்டிகை உப்பு அல்லது சர்க்கரை சேர்க்கவும். வெங்காயம் விரைவில் மென்மையாக, பழுப்பு நிறமாக மாறும்.

பீன்ஸ் வெட்ட

publive-image

ஒவ்வொரு பீன்ஸாக வெட்டுவது கடினமாக இருக்கும், பீன்ஸை மொத்தமாக வெட்டும் போது சிரமமாக இருக்கும், நீங்கள் செய்ய வேண்டியது பீன்ஸ் மொத்தமாக எடுத்து இரண்டு பக்கங்களிலும் ரப்பர் பேண்டுகளைப் பயன்படுத்தி கட்டி, பிறகு பீன்ஸ் வெட்டவும். இப்படி செய்வதால், பீன்ஸ் விரைவாக வெட்டலாம்.

பால் காய்ச்ச

பால் காய்ச்சும் போது ஒரு மர கரண்டியை பாத்திரத்தில் வைக்கவும். இது பால் கொதித்தாலும் கசிய விடாது.

உலர் பழங்களை சேமிக்க

publive-image

உலர் பழங்களை அதிக நேரம் புதியதாக வைத்திருக்க, அவற்றை காற்றுப்புகாத பாத்திரம் அல்லது ஜிப்லாக் பையில் சேமித்து உறைய வைக்கவும். அவ்வாறு செய்வது உலர் பழங்கள் பல மாதங்களுக்கு புதியதாக இருக்கும், என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment