வீடு முழுக்க ஒட்டடை இருக்கா? வெங்காயத்தை கொதிக்க வைத்து இப்படி யூஸ் பண்ணுங்க!

நம் வீட்டு பணிகளை எவ்வாறு எளிமையான முறையில் செய்து முடிக்கலாம் என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இவை நம்முடைய வேலையை மிகவும் சுலபமாக மாற்றி விடுகின்றன.

நம் வீட்டு பணிகளை எவ்வாறு எளிமையான முறையில் செய்து முடிக்கலாம் என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இவை நம்முடைய வேலையை மிகவும் சுலபமாக மாற்றி விடுகின்றன.

author-image
WebDesk
New Update
House cleaning

அலுவலக பணியுடன் ஒப்பிடும் போது வீட்டு வேலை சற்று கடினமானது தான். அலுவலகத்தில் கூட விடுமுறை கொடுப்பார்கள். ஆனால், வீட்டு வேலையை அன்றாடம் செய்ய வேண்டும். அப்படி நாள்தோறும் நாம் செய்யும் சில வீட்டு வேலைகளை எவ்வாறு எளிமையாக மாற்றலாம் என்று இதில் பார்க்கலாம்.

Advertisment

முதலில் ஒட்டடையை எவ்வாறு சுலபமாக சுத்தம் செய்யலாம் என்று காண்போம். பாதி வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் நிறம் மாறியதும் அதனை அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.

இப்போது, இந்த தண்ணீரை தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காய தண்ணீர் முற்றிலும் ஆறியதும் அதில் ஒரு டீஸ்பூன் வினிகர் சேர்த்து கலக்க வேண்டும். இப்போது வீட்டில் இருக்கும் துடைப்பத்தின் அடிப்பகுதியில் ஒரு பழைய சாக்ஸ் எடுத்து மாட்டிக் கொள்ள வேண்டும்.

இந்த சாக்ஸை வெங்காய தண்ணீரில் நன்றாக நனைத்து, வீட்டில் ஒட்டடை இருக்கு பகுதிகளை சுத்தம் செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் வீடு சுத்தமாகும், நீண்ட நாட்களுக்கு ஒட்டடையும் வராமல் இருக்கும்.

Advertisment
Advertisements

இனி, உப்புக் கறை படிந்த கழிப்பறை பைப்புகளை சுத்தப்படுத்தும் முறை குறித்து பார்க்கலாம். இதற்காக, ஒரு பாத்திரத்தில் சிறிதளவு பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒரு எலுமிச்சையை சாறு பிழிந்து இத்துடன் கலந்து கொள்ள வேண்டும். இனி அந்த எலுமிச்சையின் தோலை இந்தக் கலவையில் நன்றாக தடவிக் கொள்ளலாம்.

இப்போது, இந்த எலுமிச்சை தோலை பயன்படுத்தி கழிப்பறையில் உப்புக் கறை படிந்த பைப்புகள் மீது தேய்க்கலாம். இப்படி செய்தால் பைப்பில் இருக்கும் கறைகள் அனைத்தும் முற்றிலுமாக நீங்கி விடும். இந்த டிப்ஸ் மூலம் பாத்ரூமை சுத்தமாக வைத்திருக்க முடியும்.

எனவே, இது போன்ற சிம்பிளான டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் நம்முடைய தினசரி பணியை சுலபமாக நம்மால் மாற்ற முடியும்.

நன்றி - Indian Recipes Youtube Channel

Kitchen Hacks In Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: