scorecardresearch

Kitchen Tips: காரசாரமான உணவுக்கு இன்ஸ்டண்ட் சில்லி எண்ணெய்.. செஃப் பகிரும் சீக்ரெட் ரெசிபி!

உங்களுக்குப் பிடித்த சைனீஸ் ரெசிபிகளில் இதைப் பயன்படுத்துங்கள் என்று செஃப் சரண்ஷ் கோயிலா கூறினார்.

Kitchen Tips: காரசாரமான உணவுக்கு இன்ஸ்டண்ட் சில்லி எண்ணெய்.. செஃப் பகிரும் சீக்ரெட் ரெசிபி!
Kitchen tips chef shares chilli oil recipe for Spice up your food

உங்களுக்கு காரசாரமாக உணவு சாப்பிட ஆசையா? உங்களுக்கு தேவையானது மிளகாய் எண்ணெய், இது பொதுவாக சீன உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

இதை கடையில் வாங்க வேண்டிய அவசியமில்லை. சில காய்ந்த மிளகாய், சில எளிய மசாலாக்கள் போதும். நீங்களே வீட்டிலேயே சிறிது நேரத்தில்’ சுவையான மிளகாய் எண்ணெய் தயாரிக்கலாம்.

பிரபல செஃப் சரண்ஷ் கோயிலாவின் பகிரும் சிம்பிள் மிளகாய் எண்ணெய் ரெசிபி இதோ.

தேவையான பொருட்கள்

10 – காய்ந்த காஷ்மீரி மிளகாய்

10 – காய்ந்த மிளகாய்

2 டீஸ்பூன் – வறுத்த பூண்டு

2 டீஸ்பூன் – வறுத்த வெங்காயம்

1 டீஸ்பூன் – உப்பு

1.5 தேக்கரண்டி – சர்க்கரை

2 – அன்னாச்சி பூ

3-4 – சிச்சுவான் மிளகு

1 தேக்கரண்டி – டார்க் சோயா சாஸ்

½ கப் – சூடான எண்ணெய்

செய்முறை

மிளகாய் கிரிஸ்பியாக ஆகும் வரை, கடாயில் வறுக்கவும்.

ஒரு பிளெண்டரில், வறுத்த மிளகாய், பூண்டு, வெங்காயம், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கரடுமுரடாக அரைக்கவும்.

கலவையை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.

கலவையில் அன்னாச்சி பூ, சிச்சுவான் மிளகு, டார்க்க சோயா சாஸ் சேர்க்கவும். சூடான எண்ணெயை ஊற்றி நன்கு கலக்கவும். உங்கள் மிளகாய் எண்ணெய் இப்போது தயாராக உள்ளது.

இதை உங்களுக்கு பிடித்த சீன ரெசிபிகளில் பயன்படுத்தவும். மேலும், நீங்கள் விரும்பினால், உங்கள் கிச்சடி, அல்லது சூப்களில் கூட இதை சேர்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Kitchen tips chef shares chilli oil recipe for spice up your food