/indian-express-tamil/media/media_files/2025/08/28/moog-dal-chat-1-2025-08-28-16-22-43.jpg)
Cooking Tips
பல சமயங்களில், அடிக்கடி சமைப்பவராக இருந்தாலும், இறைச்சியை மென்மையாகவும், சுவையாகவும் சமைக்க திணறுவதுண்டு. இறைச்சி காய்ந்து, ரப்பர் போல ஆகிவிடுவதால், சாப்பிடுவதற்கு கடினமாக இருக்கும். இந்தக் கஷ்டத்திற்கு ஒரு அருமையான தீர்வைக் கொண்டு வந்திருக்கிறார் பிரபல சமையல் கலைஞர் செஃப் அஜய் சோப்ரா.
புதியதாக சமைப்பவர்களுக்கு இறைச்சியை சமைப்பது கொஞ்சம் பயமாக இருக்கலாம். சரியான வெப்பநிலை, நேரம், இறைச்சி வெட்டும் முறை, சமைக்கும் நுட்பங்கள் போன்ற பல விஷயங்கள் இதற்குத் தேவைப்படும் என்று தோன்றும், ஆனால் உண்மையில் ஒரு சிறிய ரகசியம் போதும் என்று சொல்கிறார் செஃப் அஜய்.
இந்த ஒரு ரகசியம் போதும்!
நீங்கள் சமைத்த இறைச்சியை, அதை வெட்டுவதற்கு முன், 5 முதல் 10 நிமிடங்கள் வரை அப்படியே வைக்க வேண்டும். அதாவது, இறைச்சிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
இறைச்சியை சமைக்கும்போது, அதிலுள்ள இயற்கையான சாறுகள் வெளியேறுகின்றன. இறைச்சிக்கு சிறிது ஓய்வு கொடுப்பதன் மூலம், அந்த சாறுகள் மீண்டும் இறைச்சியின் உள்ளே பரவி, அதை சுவையாகவும், மென்மையாகவும் மாற்றும்.
மொறுமொறுப்பான மூங்தால் சாட்
இறைச்சி குறிப்புடன், செஃப் அஜய் மற்றொரு சுவையான குறிப்பையும் பகிர்ந்துள்ளார். மொறுமொறுப்பான மற்றும் சுவையான மூங்தால் சாட் (பச்சை பயறு சாட்) எப்படி செய்வது?
பச்சை பயறு வேகவைக்கும்போது, அதன் வாடை நீங்க, அதை சரியாக கொதிக்க வைக்க வேண்டும். அதே சமயம், அதை அதிகமாக வேகவைத்துவிடக் கூடாது. மூங்தால் பச்சையாகவும் இருக்கக் கூடாது, அதே சமயம் குழையவும் கூடாது.
இந்த சின்ன சின்ன டிப்ஸ்களை நீங்களும் பின்பற்றி கறி சமையலையும் பாசிப்பயறு சாட்டையும் சூப்பரா மாத்தலாமே!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.