உங்கள் கிச்சனில் பிடிவாதமான கறைகளை சுத்தம் செய்வதில், நீங்கள் சோர்வாக இருந்தால் எங்களிடம் சில நம்பமுடியாத ஹேக்ஸ் உள்ளன. இது உங்கள் எல்லா பிரச்சனைகளையும் தீர்ப்பது மட்டுமல்லாமல், முடிவுகளுடன் உங்களை ஆச்சரியப்படுத்தும்.
எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா கலவையானது ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் காரத்தன்மையின் நன்மைகளால் நிரம்பியுள்ளது, இது உடனடியாக வேலை செய்யும்.
எப்படி பயன்படுத்துவது?
சிறிது பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாற்றை, தண்ணீரில் கலந்து, மேற்பரப்பில் தெளிக்கவும். சிறிது நேரம் விட்டு, வெதுவெதுப்பான நீரில் துடைக்கவும். முடிவுகளைப் பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த சொல்யூஷன் மேற்பரப்புகளை சுத்தம் செய்து அவற்றை பிரகாசமாக்குகிறது.
அதே நேரத்தில் இதன் கடுமையான வாசனை கொறித்துண்ணிகள் மற்றும் பூச்சிகளை தள்ளி வைத்திருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/OCBat1pD1d3U7xTHjSf7.jpg)
கிரீஸ் மற்றும் கறை நீங்க
சமையலறையின் மேற்பரப்பைச் சுத்தம் செய்த பிறகும், அடுப்பைச் சுற்றி திடமான கிரீஸ் படிவுகளை நீங்கள் அடிக்கடி பார்ப்பீர்கள்.
பேக்கிங் சோடாவை எலுமிச்சை சாறுடன் கலந்து பேஸ்ட் செய்து, கிரீஸ் மற்றும் கறை உள்ள மேற்பரப்பில் தடவி ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின்னர் அவற்றை சிறிது சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும் அல்லது துடைக்கவும். இதன் சிறந்த விஷயம் என்னவென்றால், இது மற்ற ரசாயன அடிப்படையிலான ஸ்ப்ரேக்கள் மற்றும் சொல்யூஷன் போல ஆபத்தானது அல்ல.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“