காய்கறிகள் மற்றும் பல்வேறு வகையான சாஸ்களை கொண்டு தயாரிக்கப்படும் ஃபிரைடு ரைஸ் யாருக்குத் தான் பிடிக்காது? ஆனால் நான்-ஸ்டிக் அல்லது அலுமினிய பாத்திரத்தில் இதை சமைக்கும் போது, அரிசி கடாயில் அடிக்கடி ஒட்டிக்கொள்ளும்.
இந்த பிரச்சனையை சமாளிக்க உதவும் பயனுள்ள குறிப்பு இங்கே…
என்ன செய்வது?
முதலில் அடுப்பில் கடாய் வைத்து (அலுமினியம்/ மற்ற பாத்திரங்கள்) அதிக தீயில் சூடாக்கவும்.
அதில், சிறிது எண்ணெய் சேர்த்து கடாயை மெதுவாக சுழற்றவும். இதனால் எண்ணெய் கடாய் முழுவதும் சமமாக பரவுகிறது. எண்ணெய் சூடானதும், கடாயில் இருந்து எடுத்து தனியாக வைக்கவும்.
இப்போது கடாயை மீண்டும் சூடாக்கி ஃபிரைடு ரைஸ் செய்யலாம், இப்படி செய்வதால் அரிசி கடாயில் ஒட்டாமல் இருக்கும், இது நூடுல்ஸ் சமைப்பதற்கும் பொருந்தும்.
அடுத்த முறை நீங்கள் குடும்பத்திற்கு ஃபிரைடு ரைஸ் அல்லது நூடுல்ஸ் சமைக்கும் போது இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“