நீங்கள் சமைப்பதற்கு முன், சில காய்கறியின் தோலை அப்படியே சேர்க்கலாம். ஆனால், சில காய்கறி, பழங்களின் தோல்கள் உண்ணக்கூடியவை அல்ல, நீங்கள் அவசியம் தோலுரிக்க வேண்டிய காய்கறிகள் இங்கே
அவகடோ
இந்த கிரீம் பழத்தை பச்சையாக சாப்பிட விரும்பினால், தோலை தூக்கி எறியுங்கள். அவகடோ பழத்தின் தோல் கெட்டியானது, கடினமானது மற்றும் சுவையாக இருக்காது. ஆனால் இது உண்ணக்கூடியது தான். நீங்கள் ஒரு ஸ்மூத்தியில் அவகேடோவைச் சேர்த்தாலோ அல்லது மெல்லிய, மென்மையான தோலைக் கொண்ட வேறு வகை அவகடோ பழத்தை கண்டாலோ, சிறிதும் தயங்காமல் பயன்படுத்தவும்.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை ஆகிய சிட்ரஸ் பழங்களின் சுவை பல சமையல் குறிப்புகளில் முக்கிய பங்கு வகிக்கிறது, எனவே நீங்கள் சிட்ரஸ் பழத்தை ஜூஸ் செய்யும்போதோ அல்லது சிற்றுண்டியாக அனுபவிக்கும்போதோ தோலைச் சேமிக்கவும்.
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழம் தடிமனான, கடினமான தோல்களைக் கொண்டுள்ளன, அவை சில நேரங்களில் கடுமையான காலநிலையிலிருந்து அவற்றின் மென்மையான உட்புறங்களைப் பாதுகாக்கின்றன. அவற்றில் தோல் கரடுமுரடான முட்களால் ஆனது. எந்த வழியிலும் அதை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
மாம்பழங்கள்
நீங்கள் மாம்பழத் தோல்களை உண்ணலாம், ஆனால் அவற்றில் சிறிதளவு உருஷியோல் உள்ளது, இது விஷப் படர்க்கொடியில் உள்ள இரசாயனமாகும். எனவே, பாதுகாப்பாக இருக்க மாம்பழத் தோலை தூக்கி எறியுங்கள், குறிப்பாக நீங்கள் விஷப் படர்க்கொடிக்கு உணர்திறன் உள்ளவர் என்று தெரிந்தால்.
பட்டர்நட் ஸ்குவாஷ்
பட்டர்நட் ஸ்குவாஷ் தோல் தடிமனாகவும், உரிக்க கடினமாகவும் இருப்பது மட்டுமல்லாமல், அது நமக்கும், சுவையான சதைக்கும் இடையில் நிற்கிறது. நீங்கள் எப்பொழுதும் அதை உரிக்க வேண்டும், பூசணிக்கும் இது பொருந்தும்.
பழத்தோல்களின் பயன்கள்
பொதுவாக பயன்படுத்தப்படாத பழத்தோல்களை குப்பையில் போடுவது ஒரு பழக்கம். பார்க்க அவை, வேண்டாதது போல தோன்றினாலும், சில பழங்களின் தோல்கள் உண்மையில் ஆரோக்கியமானவை மற்றும் மிகவும் பயனுள்ளவை.
நீங்கள் இதுவரை யோசிக்காத பழத்தோல்களின் பயன்கள் இதோ…
எலுமிச்சை தோல்
எலுமிச்சை தோல் உங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கும், வாசனையை நீக்கவும்’ எளிதான வழியாகும். எலுமிச்சை தோலை கொண்டு உங்கள் கெட்டிலை மிக எளிதாக சுத்தம் செய்யலாம். நீங்கள் செய்ய வேண்டியது, கெட்டிலில் சிறிது எலுமிச்சை தோல்களை போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இது அதில் உறைந்திருக்கும் தாது உப்புகளை எளிதில் நீக்கிவிடும்.
தக்காளி தோல்
தக்காளி தோல்கள் ஜீரணிக்க முடியாதவை என்று பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இருப்பினும், இந்த தக்காளி தோல்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நம்பமுடியாத ஆதாரம். அவற்றைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழி, தோலை வெயிலில் காயவைத்து, உலர வைக்க வேண்டும். பின்னர் நசுக்கி நன்றாக தூள் தயாரிக்க வேண்டும். இந்த தக்காளி தோல் தூளை பல்வேறு உணவுகளில் தாளிக்க பயன்படுத்தலாம்.
மாதுளை தோல்
மாதுளை ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது, தொண்டை புண் மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் தருகிறது. மாதுளை தோலை அரைத்து, வெதுவெதுப்பான நீரில் பயன்படுத்தவும். இந்த நீரைக் கொண்டு வாய் கொப்பளிக்க’ தொண்டை வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும், இந்த தோலைக் கொண்டு உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கவும் முடியும். இந்த தோலின் உட்புறத்தை’ உங்கள் தோலில் மெதுவாக தேய்த்து 10-15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி, மாற்றத்தைப் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“