/indian-express-tamil/media/media_files/2025/07/03/reuse-waste-leftover-soap-tips-2025-07-03-23-45-09.jpg)
Reuse waste leftover soap tips
நாமில் பலரும் குளித்து முடித்ததும் மீதமிருக்கும் சிறிய சோப்பு துண்டுகளை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், இனிமேல் அப்படிச் செய்யாதீர்கள்! தூக்கி எறியப்படும் அந்த சின்ன சோப்பு துண்டுகளிலும் இத்தனை பயன்கள் இருக்கிறதா என இதைப் படித்த பிறகு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
உங்களிடம் காய்கறி துருவும் கிரேட்டர் (grater) இருக்கும் அல்லவா? அதை எடுத்து, இந்த சோப்புத் துண்டுகளை நன்றாகத் துருவிக் கொள்ளுங்கள். துருவிய பிறகு கிரேட்டரை நல்ல சூடான நீரில் கழுவ மறந்துவிடாதீர்கள். இப்படிச் செய்வதால், காய்கறி துருவும்போது சோப்பின் வாசனை வராமல் இருக்கும்.
வாஷிங் மெஷின் துர்நாற்றத்தைப் போக்க எளிய வழி
வாஷிங் மெஷினில் துணிகளைத் துவைத்த பிறகு, சில சமயங்களில் உள்ளே ஒருவித துர்நாற்றம் வீசக்கூடும். இதைத் தவிர்க்க, துருவிய சோப்பைப் பயன்படுத்தலாம்.
துருவிய சோப்புத் துண்டுகளை ஒரு சிறிய காட்டன் துணியில் போட்டு நன்கு முடிச்சு போட்டுக்கொள்ளவும். இந்தச் சோப்பு முடிச்சை வாஷிங் மெஷினுக்குள் வைத்து, மெஷினின் கதவை மூடி விடவும்.
இப்படிச் செய்வதால், வாஷிங் மெஷினில் எந்தவித துர்நாற்றமும் இல்லாமல், எப்போதும் புதிய வாசனையுடன் இருக்கும். இந்த எளிய குறிப்பை நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.