சில நேரங்களில் புதினா, கொத்தமல்லி மலிவான விலையில் கிடைக்கும் போது அதிகமாக வாங்கி விடுகிறோம். எப்படித்தான் பாதுகாப்பாக சேமித்தாலும் புதினா, கொத்தம்மல்லி சீக்கிரமே வாடிவிடும் அல்லது அழுகிவிடும். ஆனால் இனி கவலையில்லை.
செஃப் விகாஸ் கண்ணா மூலிகைகளின் ஆயுளை அதிகரிக்க ஒரு சூப்பர் தந்திரத்தைப் பகிர்ந்துள்ளார்.
இந்த 27 வினாடிகள் உங்களுக்கு நிறைய சுவைகளையும், புத்துணர்ச்சியையும் சேமிக்கக்கூடும். 8-10 நாட்கள் வரை ஃபிரிட்ஜில் மூலிகைகளை புதியதாக வைத்திருக்க இது சிறந்த தந்திரம், என்று அவர் கூறினார்.
இதோ அந்த வீடியோ
நீங்கள் செய்ய வேண்டியது ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அதில் மூலிகையின் தண்டு தண்ணீரில் நனையுமாறு வைக்கவும். அதை வீடியோவில் காட்டியபடி, டம்ளருடன் அப்படியே வைத்து, ஒரு பிளாஸ்டிக் பையில் மூடி வைக்கவும். ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும் தண்ணீரை மாற்றவும், என்று அவர் பரிந்துரைத்தார்.
அடுத்தமுறை புதினா, கொத்தமல்லி ரொம்ப நாள் ஃபிரெஷா இருக்க ஃபிரிட்ஜில இப்படி ஸ்டோர் பண்ணுங்க…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“