ஒவ்வொரு இந்திய சமையலறையிலும், இரும்பு சமையல் பாத்திரங்கள் இன்றியமையாத பகுதியாகும். இரும்பு பாத்திரங்களில் சமைப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது.
இரும்பு பாத்திரங்களில் உணவை சமைப்பது, இரும்புச்சத்து குறைபாடு அல்லது ரத்த சோகையை எதிர்த்துப் போராட உதவுகிறது. சமைக்கப்படும் உணவில் இரும்புச் சத்து கலந்து ஆரோக்கியமான உணவாக அமைகிறது. சமையலுக்கு எண்ணெய் குறைவாக பயன்படுத்துவதால் உடல் நலத்திற்கும் நல்லது.
இருப்பினும் சரியாக பராமரிக்கவிட்டால் இரும்பு பாத்திரங்கள் விரைவில் துருப்பிடித்து விடும்.
மாஸ்டர்செஃப் பங்கஜ் பதூரியா, இரும்புச் சட்டிகளைப் பராமரிக்க ஒரு எளிய உதவிக்குறிப்பைப் பகிர்ந்து கொண்டார்.
எப்படி செய்வது?
சமையல் பாத்திரங்களைக் கழுவி உலர வைக்கவும். நீரை அகற்றுவதற்கு நீங்கள் அடுப்பில் சிறிது சூடாக்கலாம். காய்ந்ததும் பாத்திரம் முழுவதும் கடுகு எண்ணெயை தடவவும்.
முடிந்ததும், மென்மையான துணி அல்லது டிஷ்யூ பயன்படுத்தி அதிகப்படியான எண்ணெயைத் துடைக்கவும். பாத்திரத்தை உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
இது உங்களின் அனைத்து இரும்பு வாணலிகள் மற்றும் பாத்திரங்கள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்யும், என்று பதூரியா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“