/indian-express-tamil/media/media_files/RY6PleTTwM0V2wTgtQWo.jpg)
How to get rid of garlic smell from hands
பூண்டு வாசனை உங்கள் உணவில் சுவையை சேர்க்கலாம், ஆனால் அதை அகற்றுவது கடினம். சமைக்கும் போது, ​​உணவுகளில் பயன்படுத்த பூண்டு பற்களை வெட்டுவதற்கு நிறைய பேர் கட்டிங் போர்டு பயன்படுத்துகிறார்கள்.
பூண்டின் வாசனை அது தொடும் பலகை, உங்கள் கைகள், கத்தி மற்றும் நீங்கள் பயன்படுத்திய மற்ற பாத்திரங்கள் உட்பட எல்லாவற்றிலும் ஒட்டிக் கொண்டிருக்கலாம். இதனால் உங்கள் கைகள் மற்றும் பாத்திரங்கள் சோப்பு போட்டு கழுவிய பிறகும் 'பூண்டு' வாசனை வரும்.
உங்கள் கைகள் மற்றும் பாத்திரங்களில் இருந்து பூண்டின் கடுமையான வாசனையிலிருந்து விடுபட சில எளிய ஹேக்குகள் இங்கே:
பாத்திரங்களுக்கு
கட்டிங் போர்ட் மற்றும் கத்தி வலுவான பூண்டு வாசனையை விட்டு வெளியேற மறுத்தால், அவற்றை சிறிது நேரம் வெதுவெதுப்பான நீரில் விடலாம். அவற்றை வெளியே எடுத்து பாத்திரம் கழுவும் பொடியை மேலே தடவி மூடி வைக்கவும்.
பலகை மற்றும் கத்தியை ஒரு நல்ல டிஷ் ஸ்க்ரப்பர் அல்லது பிரஷ் மூலம் ஸ்க்ரப் செய்யவும். பிறகு சோப் கொண்டு ஒருமுறை பாத்திரங்களை கழுவவும்.
/indian-express-tamil/media/media_files/yeMW8hpm5zMU6V5coZMD.jpg)
வாசனை இன்னும் போகவில்லை என்றால், நீங்கள் அதே செயல்முறையை மீண்டும் உப்பு அல்லது சோடா மற்றும் எலுமிச்சை கொண்டு செய்யலாம். உப்பு அல்லது சோடாவை தூவி, எலுமிச்சை துண்டை பயன்படுத்தி அவற்றை துடைத்து, பின்னர் கழுவவும்.
கைகளுக்கு
எலுமிச்சையை இங்கும் பயன்படுத்தலாம். உங்கள் கைகளில் இருந்து பூண்டு வாசனையை அகற்றுவதற்கான எளிதான வழி, வலுவான மணம் கொண்ட ஃப்ளவர் ஹேண்ட் வாஷ் மூலம் கைகளை கழுவுங்கள்.
உணவகங்களில் பரிமாறும் ஃபிங்கர் கிண்ணங்களைப் போலவே எலுமிச்சை சாறு மற்றும் வெதுவெதுப்பான நீரில் உங்கள் கைகளை நனைக்கலாம். எலுமிச்சை, பூண்டின் வாசனையை நடுநிலையாக்க உதவுகிறது.
அடுத்தமுறை பூண்டு சமைக்கும்போது இந்த குறிப்புகளை நினைவில் கொள்ளுங்கள்…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us