நாம இப்பதான் புதுசா லைட்டர் வாங்கிருப்போம், ஆனா கொஞ்ச நாள்லயே அது வேலை செய்யாம போயிடும். இப்படி ஆகும்போது அதை தூக்கிப் போடுறதுக்கு முன்னாடி, இந்த சூப்பர் டிப்ஸை ஒருமுறை ட்ரை பண்ணிப் பாருங்க. வேலை செய்யாத லைட்டர் கூட புதுசு மாதிரி எரியும்!
லைட்டரை சரிசெய்வது எப்படி?
Advertisment
லைட்டரின் நுனியில் (tip) அழுக்குகள் சேர்வதாலோ அல்லது அடைப்பு ஏற்படுவதாலோ சரியாக எரியாமல் போகலாம். இதைச் சரிசெய்ய ரொம்பவே ஈஸியான ஒரு வழி இருக்கு:
முதலில் உங்க கேஸ் அடுப்பை பற்ற வையுங்கள்.
Advertisment
Advertisements
இப்பொழுது, வேலை செய்யாத லைட்டரின் நுனியை மட்டும் எரிந்து கொண்டிருக்கும் அடுப்புத் தீயில் காட்டுங்கள்.
சுமார் 5 முதல் 10 விநாடிகள் வரை தீயில் காட்டினால் போதும். சூட்டினால் லைட்டரின் நுனியில் சேர்ந்திருக்கும் அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும்.
பிறகு, ஒரு காது சுத்தப்படுத்தும் பட்ஸ் (ear bud) எடுத்து, லைட்டரின் நுனியை மெதுவாகவும் கவனமாகவும் சுத்தம் செய்யுங்கள்.
அழுக்குகள் முழுமையாக நீக்கப்பட்டதும், லைட்டரை உபயோகித்துப் பாருங்கள். கண்டிப்பாக சூப்பராக எரியும்!
இந்த எளிய டிப்ஸை பயன்படுத்தி, உங்க வேலை செய்யாத லைட்டரை மீண்டும் பயன்படுத்தலாம். இந்த ஐடியா உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்க நண்பர்களுக்கும் பகிருங்கள்!