இரும்பு தோசைக்கல்லைப் பயன்படுத்துவதற்கு முன், அதைப் பழக்குவது (சீசனிங்) அவசியம். இதன் மூலம் தோசைக்கல் நீண்ட நாட்கள் உழைப்பதோடு, தோசையும் ஒட்டாமல் வரும். இரும்பு தோசைக்கல்லைப் பழக்கும் முறை இதோ:
Advertisment
இரும்பு தோசைக்கல்லைப் பழக்கும் முறை
முதலில் தோசைக்கல்லை சோப்பு போட்டு நன்றாகக் கழுவி, ஒரு பெரிய அகலமான பாத்திரத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
Advertisment
Advertisements
அரிசி கழுவிய நீர் அல்லது அரிசி வடித்த நீரை எடுத்து, தோசைக்கல் நன்கு மூழ்கும் அளவுக்கு ஊற்றவும். இரண்டு நாட்கள் அப்படியே ஊற விடவும். இது தோசைக்கல்லில் உள்ள கருப்பு நிறத்தைப் போக்க உதவும்.
இரண்டு நாட்கள் கழித்து, தோசைக்கல்லை ஊறவைத்த நீரை அகற்றிவிட்டு, சோப்பு மற்றும் ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தி இரு பக்கமும் ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாகத் தேய்த்துக் கழுவவும். இதனால் தோசைக்கல்லில் படிந்திருந்த கருப்பு நிறம் முழுவதுமாக நீங்கிவிடும்.
கழுவிய தோசைக்கல்லைத் துடைத்து, அடுப்பில் வைத்து நன்றாகச் சூடாக்கவும்.
ஒரு வெங்காயத்தை வட்டமாக நறுக்கி, சூடான தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு, அந்த வெங்காயத்தைப் பயன்படுத்தி நன்கு தேய்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை தேய்க்கவும்.
பொன்னிறமான வெங்காயத்தை அகற்றிவிட்டு, ஒரு காட்டன் துணியால் தோசைக்கல்லை நன்றாகத் துடைக்கவும். இப்போது தோசைக்கல்லில் உள்ள கருப்புப் பசை முழுவதுமாக நீங்கி, பளபளப்பாக இருக்கும்.
மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயத் துண்டுகளைக் கொண்டு தோசைக்கல்லைத் தேய்க்கவும். இப்போது தோசை மாவை ஊற்றி தோசை வார்க்கலாம். தோசை ஒட்டாமல் நன்றாக வரும்.
இதே முறையில் இரும்புப் பாத்திரங்கள் எதுவாக இருந்தாலும் பழக்கலாம். இரும்புப் பாத்திரங்களில் சமைத்துச் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இந்தக் குறிப்புகளைப் பின்பற்றி உங்கள் இரும்பு தோசைக்கல்லைப் பழக்கி, சுவையான தோசைகளைச் சமைத்து மகிழுங்கள்!