Advertisment

ஒரு வாரம் வரை ஃபிரெஷா இருக்கும்- ஃபிரிட்ஜில் காளான் சேமிப்பது எப்படி?

மாஸ்டர்செஃப் பங்கஜ் பதூரியா, சமையலறையில் உங்கள் நேரத்தை முடிந்தவரை மன அழுத்தமில்லாததாக மாற்ற சில எளிய ஹேக்குகளைப் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
cooking

Kitchen Tips

உணவை சமைப்பது என்பது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அடிப்படை வாழ்க்கைத் திறனாகும், சிலர் இதை முழுமையாக அனுபவித்து செய்கிறார்கள், மற்றவர்கள் செய்ய வேண்டும் என்பதற்காகச் செய்கிறார்கள். இருப்பினும், நீங்கள் ஒரு புதிதாக சமைப்பவராக இருந்தாலும் சரி அல்லது ஒரு தொழில்முறை நிபுணராக இருந்தாலும் சரி, சமையலில் தேர்ச்சி பெறுவதற்கு சில பயிற்சிகள் தேவை - இது சமையல் பரிசோதனைகள் மற்றும் அனுபவத்துடன் மட்டுமே வரும்.

Advertisment

மாஸ்டர்செஃப் பங்கஜ் பதூரியா, சமையலறையில் உங்கள் நேரத்தை முடிந்தவரை மன அழுத்தமில்லாததாக மாற்ற சில எளிய ஹேக்குகளைப் பகிர்ந்துள்ளார்.

காளான் சேமிக்க                                         

காளான்களில் அதிக ஈரப்பதம் இருப்பது, அவற்றின் ஆயுளைக் குறைக்கிறது. ஆனால், இந்த எளிய ஹேக் மூலம் நீங்கள் இப்போது காளான்களை அதிக நேரம் சேமிக்க முடியும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், காற்று புகாத பாத்திரத்தை எடுத்து காய்ந்த துணி அல்லது டிஷ்யூ பேப்பரை வைத்து, காளான்களை அதன்மீது வைக்கவும். பின்னர் காளான்களுக்கு மேலே ஒரு துணி வைத்து பாத்திரத்தை மூடவும். இப்படி செய்வதால், காளான்கள் குறைந்தது ஒரு வாரம் நீடிக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை பழங்கள் ஒரு மாதத்திற்கு புத்துணர்ச்சியுடன் இருக்க, அவற்றை எவ்வாறு சேமிப்பது என்பதற்கான உதவிக்குறிப்பு இங்கே.

juice

ஒரு கண்ணாடி பாத்திரத்தை எடுத்து, அதில் தண்ணீர் நிரப்பவும். அதில் எலுமிச்சைகளை போட்டு, ஜாடியை மூடவும். இந்த வழியில், எலுமிச்சை நீண்ட காலத்திற்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும். எலுமிச்சையிலிருந்து அதிக சாற்றைப் பெற, அவற்றை வெட்டுவதற்கு முன் மேசையில் வைத்து கையில் உருட்டவும்.

அடுத்தமுறை சமைக்கும் போது மறக்காமல் இந்த குறிப்புகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment