நாம் வீடுகளில் தினசரி பயன்படுத்தும் கறிவேப்பிலையை தினமும் வாங்கி வருவது கடினம். அதேநேரம் மொத்தமாக வாங்கி வைத்தால், சீக்கிரம் கருகிவிடும். ஆனால் ஒரு சின்ன விஷயம் செய்தால் நாம் கறிவேப்பிலை மாசக் கணக்கில் வாடாமல் ப்ரஷ்ஷாக வைத்து பயன்படுத்தலாம். அது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
கோமுஸ் லைஃப் என்ற யூடியூப் சேனலில் இந்த டிப்ஸ் கூறப்பட்டுள்ளது. மேலும் சில கிச்சன் டிப்ஸ்களும் கூறப்பட்டுள்ளது. வீடியோவின் படி, ”கறிவேப்பிலையை முதலில் நன்றாக கழுவி காய வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இலையை காம்புகளோடு கிள்ளி எடுத்துக் கொள்ள வேண்டும். தனியாக இலைகளாக உதிர்த்தும் வைத்துக் கொள்ளலாம்.
அடுத்து நாம் எந்த டப்பாவில் வைக்கிறோமோ, அதன் அடியில் டிஷ்யூ பேப்பரை முழுவதுமாக வைக்க வேண்டும். பின்னர் அதில் கறிவேப்பிலை இலையை நிரப்பி, கடைசியாக டிஷ்யூ பேப்பர் வைத்து மூடிக் கொள்ள வேண்டும். இப்படி சேமித்து வைத்தால் கறிவேப்பிலை மாசக் கணக்கில் ப்ரெஷ்ஷாக இருக்கும்.”
இதேபோல் எலுமிச்சையும் ப்ரஷ்ஷாக நாட்கணக்கில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதற்கு எலுமிச்சையை ராப்பர் கொண்டு சுற்றி வைக்க வேண்டும்.
Advertisment
Advertisements
அடுத்து பித்தளைப் பொருட்களில் எளிதாக அழுக்கு படிந்துவிடும். ஆனால் அதனை சுத்தம் செய்வது கடினம். இடுக்குகளில் அழுக்குகள் எப்போதும் படிந்திருக்கும். அதனை எடுப்பது கடினம். இதற்கு முதலில் ஒரு துணி கொண்டு விளக்கை நன்றாக துடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பொடியாக செய்த படிகாரக் கல்லை தூவி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். இப்போது பித்தளைப் பொருட்கள் பளிச்சென்று மாறிவிடும்.