சமையலறையில் நேரத்தைச் செலவிடுவது, அன்பானவர்களுக்கான உணவைச் சமைப்பது ஆகியவை வாழ்க்கையின் மிகப்பெரிய இன்பங்களில் ஒன்றாகும். நீங்கள் ஆரோக்கியமான உணவைத் தயாரிப்பதில் நேரத்தையும், சக்தியையும் செலவழித்தால், உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருக்க ஏன் கடுமையான, தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைப் பயன்படுத்துகிறீர்கள்?
Advertisment
உங்கள் உணவை மாசுபடுத்தக்கூடிய மோசமான இரசாயனங்களை பயன்படுத்தாமல் உங்கள் சமையலறையை சுத்தம் செய்ய ஏராளமான வழிகள் உள்ளன.
உங்கள் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்த அனைத்து இயற்கை தீர்வுகளைப் பயன்படுத்தி நீங்களே சொந்தமாக வீட்டில் கிச்சன் க்ளென்சர் செய்யலாம். இங்கே பாருங்கள்.
கிச்சன் க்ளென்சர் செய்வது எப்படி?
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள்
1 கப் காய்ச்சி வடிகட்டிய வெள்ளை வினிகர்
1 கப் தண்ணீர்
3 சொட்டு டீ ட்ரீ எண்ணெய்
3 சொட்டு கிரேப்ஸ் எண்ணெய்
ஸ்பிரே பாட்டில்
எப்படி செய்வது?
ஸ்பிரே பாட்டிலில்’ வினிகரை ஊற்றவும், பின்னர் தண்ணீர் ஊற்றவும்.
மெதுவாக மூன்று சொட்டு டீ ட்ரீ எண்ணெய் மற்றும் மூன்று சொட்டு கிரேப்ஸ் எண்ணெய் பாட்டிலில் ஊற்றவும்.
பயன்படுத்துவதற்கு முன், அனைத்து பொருட்களையும் நன்கு கலக்க பாட்டிலை நன்கு குலுக்கவும்.
நேரடியாக கிச்சன் மேற்பரப்பில் அல்லது கிச்சன் துண்டு மீது தெளித்து, பகுதியை சுத்தமாக துடைக்கவும்.
குறிப்பு: எண்ணெய் பாட்டிலின் மேற்புறத்தில் தங்க முனைகின்றன, எனவே எந்த பரப்புகளிலும் தெளிப்பதற்கு முன் நன்கு குலுக்க வேண்டும்.
பாத்திரம் கழுவ
மளிகைக் கடையில் பாத்திரம் கழுவும் சோப் வாங்க மறந்து மறந்துவிட்டீர்களா? கவலை வேண்டாம். நீங்களே சொந்தமாக வீட்டில் டிஷ் வாஷர் செய்யலாம்:
1 கப் பேக்கிங் சோடா, 1 கப் வாஷிங் சோடா, 1 கப் கோஷர் உப்பு மற்றும் 3 எலுமிச்சைப் பழச்சாறுடன் சேர்த்து கலக்கவும். உங்கள் டிஷ் வாஷர் சோப் ரெடி.
வழக்கமான சுமைக்கு, 1 தேக்கரண்டி, நிறைய பாத்திரங்களுக்கு 2 தேக்கரண்டி பயன்படுத்தவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “