/indian-express-tamil/media/media_files/x8IgWSzRp9smKVWyc1yd.jpg)
How to cook rice
அரிசி, இந்திய உணவின் பிரதானம். ஒரு நேரம் வெள்ளைச் சோறு சாப்பிடாத யாரையும் தமிழகத்தில் பார்க்க முடியாது. இருப்பினும்பிரியாணி முதல் ஃபிரைடு ரைஸ் வரைஅரிசி சமைக்க ஒரு பக்குவம் தேவை. ஒவ்வொரு அரிசி வகைக்கும்தனித்தனி கழுவும் முறை மற்றும் சமையல் முறைகள் தேவைப்படுகிறது.
நீங்கள் விரும்பும் பஞ்சுபோன்றசுவையான அரிசி சாதம் சமைப்பதற்கு, சில குறிப்புகள் இங்கே உள்ளன:
நீண்ட அரிசி எப்படி சமைப்பது?
உங்களிடம் வெள்ளை, பிரெளன் அரிசி, ஜாஸ்மின் மற்றும் பாசுமதி போன்ற நீண்ட அரிசி இருந்தால், சமைப்பதற்கு முன் அரிசியைக் கழுவுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரிசியை குளிர்ந்த நீரில் நன்றாக சல்லடை மூலம் கழுவ வேண்டும். இது, அதில் எஞ்சியிருக்கும் அதிகப்படியான ஸ்டார்ச் மற்றும் ரசாயனங்களை அகற்ற உதவுகிறது. அரிசியைக் கழுவிய பின் மற்றும் சமைப்பதற்கு முன் எப்போதும் 30 நிமிடம் ஊறவைக்கவும்.
அரிசி மற்றும் தண்ணீர் 1:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். 1000 கிராம் அரிசிக்கு 1000மிலி தண்ணீர் வேண்டும், அரிசி ஊறவைத்த பிறகு, தண்ணீரை 800மிலியாக குறைக்க வேண்டும்.
குறைந்த தீயில் சமைக்கவும்
அரிசி என்று வரும்போது குறைந்த தீயில் சமைப்பதே நல்லது. அரிசியை அதிக தீயில் சமைக்கக் கூடாது . மிதமான தீயில் சமைப்பது தானியங்களை அப்படியே வைத்திருக்கிறது மற்றும் அடி பிடிக்காமல் தடுக்கிறது
பாசுமதி, ஜாஸ்மின் மற்றும் பெக்கன் அரிசி ஆகியவை ’2-அசிடைல்-1-பைரோலின்’ என்ற வேதிப்பொருளில் இருந்து அவற்றின் தனித்துவமான நறுமணத்தைப் பெறுகின்றன.
நீண்ட நேரம் சமைக்கும்போது இந்த ரசாயனம் சிதைந்துவிடும்.
இதன் காரணமாக, நீங்கள் அரிசியை முதலில் அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும், ஏனெனில் இது அரிசியை குறைந்த நேரத்தில் சரியான பதத்தில் சமைக்க உதவும்.
அடுத்தமுறை இந்த அரிசி வகைகளை சமைக்கும் போது இந்த குறிப்புகளை மறக்காதீங்க..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.