நாம் அனைவரும் நம் வாழ்வில் ஒருமுறையாவது கிச்சன் சென்று சமைத்திருப்போம். அப்படி சமைக்கையில் தாளிப்பில் கறிவேப்பிலை சேர்க்கும்போது, அல்லது ஃபிரை செய்யும் போது பயந்து பயந்து அலறியிருப்போம். அதற்கு காரணம் கடாயில் இருக்கும் எண்ணெய் நம் கையில் தெறித்து காயம் ஏற்பட்டு விடும் என்பதுதான். எவ்வளவு தான் பாதுகாப்பாக சமைத்தாலும், நீங்கள் எவ்வளவு அனுபவம் வாய்ந்த சமையல்காரராக இருந்தாலும் இப்படி நடப்பதை உங்களால் தவிர்க்க முடியாது. அதற்காக நம்மால் ஃபிரை செய்யாமல் சமைக்கவும் முடியாது.
இங்கு செஃப் குணால் கபூர், பாதுகாப்பாக எண்ணெயில் ஃபிரை செய்வதற்காக ஒரு சிம்பிள் உதவிக்குறிப்பை பகிர்ந்துள்ளார். இங்கே பாருங்கள்.
காய்கறி, இறைச்சிகளை வேகவைப்பது, சமைப்பது போலவே வறுப்பதும் சமையலில் இன்றியமையாதது. ஆனால் சரியாகச் செய்யாவிட்டால் அது ஆபத்தாக முடியும், மேலும் கடுமையான தீக்காயங்கள் ஏற்படலாம்.
பலர் செய்யும் பொதுவான தவறு என்னவென்றால், எண்ணெயின் மேல் மாவை எடுத்து, பின்னர் நேராக அதில் விடுகிறார்கள், அவ்வாறு செய்வதால் எண்ணெய் தெறித்து கைகளில் காயம் ஏற்படும்.
இதற்கு சிறந்த வழி; மாவை மையத்தில் பிடித்து, எண்ணெய்க்கு அருகில் கொண்டு வாருங்கள், பின்னர் வீடியோவில் காட்டியபடி அதை உங்களுக்கு எதிர் பக்கத்தில் மெதுவாக விடவும். இப்படி செய்வதால் எண்ணெய் தெறிக்காது. அப்படியே கொஞ்சமாக தெறித்தாலும் அது எதிர்பக்கமாக சென்றுவிடும் என்று செஃப் குணால் கூறினார்.
முன்னதாக, சமையல் நிபுணர் உருளைக்கிழங்கு தொடர்பான உதவிக்குறிப்பைப் பகிர்ந்தார்.
மென்மையான உருளைக்கிழங்குகளுக்கு பதிலாக உறுதியான உருளைக்கிழங்கை வாங்கவும், முளைத்த அல்லது பச்சை நிறத்தில் இருக்கும் உருளைக்கிழங்குகளை வாங்குவதை தவிர்க்கவும்,” அவர் பரிந்துரைத்தார்.
உருளைக்கிழங்கை சேமிப்பதற்கான உதவிக்குறிப்புகளை வழங்கிய செஃப் , உருளைக்கிழங்கை உடனடியாக பாலிபேக்கில் இருந்து எடுக்க வேண்டும், ஏனெனில் அது அழுகும் செயல்முறையை துரிதப்படுத்தும். மேலும், உருளைக்கிழங்கை கழுவ வேண்டாம், இது அழுகும் செயல்முறையை கட்டுப்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“