Advertisment

பஜ்ஜி, பக்கோடா சமைக்கும் போது எண்ணெய் தெறிக்காமல் இருக்க: செஃப் வீடியோ

பலர் செய்யும் பொதுவான தவறு என்னவென்றால், எண்ணெயின் மேல் மாவை எடுத்து, பின்னர் நேராக அதில் விடுகிறார்கள்.

author-image
WebDesk
New Update
Frying

How to fry without getting burn

நாம் அனைவரும் நம் வாழ்வில் ஒருமுறையாவது கிச்சன் சென்று சமைத்திருப்போம். அப்படி சமைக்கையில் தாளிப்பில் கறிவேப்பிலை சேர்க்கும்போது, அல்லது ஃபிரை செய்யும் போது பயந்து பயந்து அலறியிருப்போம். அதற்கு காரணம் கடாயில் இருக்கும் எண்ணெய் நம் கையில் தெறித்து காயம் ஏற்பட்டு விடும் என்பதுதான்.

Advertisment

எவ்வளவு தான் பாதுகாப்பாக சமைத்தாலும் இப்படி நடப்பதை உங்களால் தவிர்க்க முடியாது. அதற்காக நம்மால் ஃபிரை செய்யாமல் சமைக்கவும் முடியாது.

இங்கு செஃப் குணால் கபூர், பாதுகாப்பாக எண்ணெயில் ஃபிரை செய்வதற்காக ஒரு சிம்பிள் உதவிக்குறிப்பை பகிர்ந்துள்ளார்.

காய்கறி, இறைச்சிகளை வேகவைப்பது, சமைப்பது போலவே வறுப்பதும் சமையலில் இன்றியமையாதது. ஆனால் சரியாகச் செய்யாவிட்டால் அது ஆபத்தாக முடியும், மேலும் கடுமையான தீக்காயங்கள் ஏற்படலாம்.

பலர் செய்யும் பொதுவான தவறு என்னவென்றால், எண்ணெயின் மேல் மாவை எடுத்து, பின்னர் நேராக அதில் விடுகிறார்கள், அவ்வாறு செய்வதால் எண்ணெய் தெறித்து கைகளில் காயம் ஏற்படும்.

இதற்கு சிறந்த வழி; மாவை மையத்தில் பிடித்து, எண்ணெய்க்கு அருகில் கொண்டு வாருங்கள், பின்னர் வீடியோவில் காட்டியபடி அதை உங்களுக்கு எதிர் பக்கத்தில் மெதுவாக விடவும். இப்படி செய்வதால் எண்ணெய் தெறிக்காது. அப்படியே கொஞ்சமாக தெறித்தாலும் அது எதிர்பக்கமாக சென்றுவிடும் என்று செஃப் குணால் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment