நீங்கள் ஒரு பிஸியான நாளில் இருக்கும் போது சமையலறை ஹேக்குகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எஞ்சிய சாதம் அல்லது புலாவை சேமிப்பது முதல், பனீரை மென்மையாக வைத்திருப்பது வரை, இந்த ஹேக்ஸ் நிறைய நேரத்தையும் முயற்சியையும் உங்களுக்கு மிச்சப்படுத்துகின்றன.
விருந்தினர்கள் எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு வரலாம் என்பதால், நீங்கள் பூரி அல்லது பஜ்ஜிகளை ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெயில் மீண்டும் வறுக்கும்போது உங்களுக்கு உதவ ஒரு விரைவான ஹேக் உள்ளது.
ஃபுட் ஸ்டைலிஸ்ட் ஷரிலின் ஆங் எல்.எஸ். கருத்துப்படி, உணவை வறுத்த பிறகு, எண்ணெயில் கணிசமான அளவு எச்சம் இருக்கும். அப்போது, சோள மாவைப் பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் அனைத்து சிறிய துகள்களையும் உறிஞ்சி விடலாம்…
எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
சோளமாவு
தண்ணீர்
செய்முறை
1 பகுதி சோள மாவு எடுத்துக் கொள்ளுங்கள்.
2 பங்கு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
இரண்டையும் கலக்கவும்.
60-70 டிகிரி செல்சியஸ் எண்ணெயில் ஊற்றவும்.
மாவை வெளியே எடுக்கவும்.
இது உண்மையிலேயே வேலை செய்கிறதா?
டாக்டர் நிருபமா ராவ் கூறுகையில், சூடான எண்ணெயில் சோள மாவுக் கலவையைக் கொட்டி, மெதுவாகக் கிளறுவது, சோள மாவு எச்சத்தை உறிஞ்சுவதால் அசுத்தங்களை வெளியேற்ற உதவுகிறது.
fine mesh strainer அல்லது cheesecloth உட்பட சூடான எண்ணெயிலிருந்து எச்சங்களை அகற்றுவதற்கான பிற எளிய முறைகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது நல்லதா?
சரியாகச் செய்தால், சூடான எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளலாம். அசுத்தங்களை வடிகட்டவும், எண்ணெயை குளிர்ந்த, இருண்ட இடத்தில் சேமித்து வைக்கவும், ஓவர் ஹீட்டிங் செய்வதை தவிர்க்கவும், மீண்டும் மீண்டும் சூடாக்கும் போது எண்ணெய் உடைந்து ஆரோக்கியமற்றதாகிவிடும்.
எண்ணெயை மீண்டும் பயன்படுத்தலாமா என்பதைத் தீர்மானிப்பதற்கு முன், நீங்கள் முன்பு வறுத்த உணவு வகைகளைக் கருத்தில் கொள்வதும் முக்கியம், என்று டாக்டர் ராவ் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“