நான் ஸ்டிக் பாத்திரங்கள்’ சமையல் செயல்முறையை எளிதாக்குகிறது என்பதை தினசரி சமைப்பவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால், உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க அந்த நான் ஸ்டிக் பாத்திரங்களை எப்போது தூக்கி எறிய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா?
Advertisment
நான் ஸ்டிக் பான்களை எப்போது தூக்கி எறிய வேண்டும் என்று உங்களுக்குத் தெரிவிக்கும் அறிகுறிகள் இங்கே உள்ளது.
சீரற்ற மேற்பரப்பு
கடுமையான பயன்பாட்டினால் வெப்பம் அல்லது ஈரப்பதம் காரணமாக, நான் ஸ்டிக் பான்கள் வார்ப்’ வளைந்து போகும். சீரற்ற மேற்பரப்பு காரணமாக, உணவு ஒரே மாதிரியாக சமைக்காது மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது உங்கள் பான்களை மாற்ற வேண்டும் என்பதற்கான ஆபத்தான அறிகுறியாகும்.
Advertisment
Advertisements
கருமை நிறம்
ஒவ்வொரு சமையல் பாத்திரங்களும் வழக்கமான பயன்பாடு மற்றும் வெப்பம் காரணமாக மங்கிவிடும். ஆனால் நான் ஸ்டிக் பாத்திரங்கள்’ கருமை நிறத்துக்கு மாறுவது என்பது, அதன் நான்-ஸ்டிக் பூச்சு(Coating) சேதமடைந்திருப்பதற்கான அறிகுறியாகும். மேலும் அதன் துகள்கள், உணவில் கலந்து அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.
டெஃப்ளானைப் பயன்படுத்தி நான் ஸ்டிக் பான்கள் தயாரிக்கப் படுகின்றன
அபாயகரமான இரசாயனம்
குறிப்பிடத்தக்க கீறல்கள் நீங்கள் கடாயை மாற்ற வேண்டும் என்பதற்கான ஆபத்தான அறிகுறியாகும். ஆய்வுகளின்படி, பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம் (PFOA) எனப்படும் மனிதனால் உருவாக்கப்பட்ட அபாயகரமான இரசாயனத்தைக் கொண்ட டெஃப்ளானைப் பயன்படுத்தி நான் ஸ்டிக் பான்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த இரசாயனத்தில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, கீறல்கள் தெளிவாகத் தெரிந்தால், டெஃப்ளான் மேற்பரப்பு சேதமடைந்திருப்பதன் அறிகுறியாகும். மேலும் ரசாயனங்கள் உங்கள் உணவில் கலந்து நச்சுத்தன்மை அடையலாம்.
4-5 வருடங்களுக்கு ஒருமுறை
சமையல்காரர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு சமையலறைப் பொருளுக்கும் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை உள்ளது. குறிப்பாக நான் ஸ்டிக் பாத்திரங்களுக்கு, இது முக்கியமாக பொருந்தும்.
நீங்கள் ஒவ்வொரு நாளும் அல்லது வாரத்திற்கு 3-4 முறை பயன்படுத்தினால், பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க ஒவ்வொரு 4-5 வருடங்களுக்குப் பிறகு’ நான் ஸ்டிக் பாத்திரங்களை மாற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நான் ஸ்டிக் பாத்திரங்களை எப்படி சுத்தம் செய்வது?
செஃப் சஞ்சீவ் கபூரின் கூற்றுப்படி, “நான் ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்திய உடனேயே கழுவ வேண்டாம். அவற்றை அறை வெப்பநிலைக்கு வர அனுமதிக்கவும், பின்னர் சாதரண நீரில் லேசான சோப்பு கரைசலைக் கொண்டு கழுவவும். மேலும், பாத்திரங்களை சுத்தம் செய்ய எப்போதும் உலோகம் இல்லாத ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“