சமைப்பதை ரசிக்காதவர்களுக்கு, சமையல் என்பது ஒரு சுமையாக இருக்கலாம்- குறிப்பாக, காய்கறி நறுக்குதல், தோலுரித்தல் மற்றும் சுத்தம் செய்தல் போன்றவை, ஆனால், சில ஹேக்குகள் இந்த சமையல் செயல்முறையை மிகவும் சுலபமாக மாற்றும்.
Advertisment
இன்று, சமையலறையில் அதிக நேரத்தைச் சேமிக்க உதவும் சில லைஃப் சேவிங் குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். மாஸ்டர் செஃப் பங்கஜ் பதூரியா தனது இன்ஸ்டாகிராமில் இதுபோன்ற பல உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.
கரப்பான் பூச்சி வராமல் தடுக்க
A person kills a cockroach
Advertisment
Advertisements
சமையலறையில் கரப்பான் பூச்சிகளை பார்த்துவிட்டால் போதும். உடனே நாம் துள்ளிக்குதித்து ஓடி விடுவோம். அவற்றை அகற்றுவதும் எளிதானது அல்ல. உங்கள் சமையலறையில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால், டிராயர் மற்றும் அலமாரிகளின் மூலையில் சிறிது போரிக் பவுடரைத் தூவவும். கரப்பான் பூச்சி இருக்கும் இடம் தெரியாமல் ஓடிவிடும்.
முட்டை வேகவைக்க
முட்டைகளை கொதிக்க வைக்கும் போது, அதில் சிறிது வெள்ளை வினிகர் சேர்க்கவும். அவ்வாறு செய்தால், உரிக்கும் போது முட்டை ஓடு எளிதாக வந்துவிடும். மேலும் கொதிக்கும் போது முட்டை உடைந்தால் அது தண்ணீரில் பரவாது.
இஞ்சியை எளிதாக தோலுரிக்க
இஞ்சியை உரிக்க இனி கத்தி தேவையில்லை. "நீங்கள் ஒரு ஸ்பூன் கொண்டு அதை எளிதாக உரிக்கலாம்.
நிறம் மாறாமல் காய்கறிகளை வேகவைக்க
பட்டாணி, கேரட் மற்றும் பீன்ஸ் போன்ற காய்கறிகளை வேகவைக்கும் போது அதனுடன் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கவும். இதனால் அவற்றில் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.
மஞ்சள் கறையை அகற்ற
உங்கள் செராமிக் பிளேட் அல்லது பாத்திரங்களில் மஞ்சள் கறை படிந்து விட்டதா? நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், மஞ்சள் கறை படிந்த இடத்தில் பேக்கிங் சோடா கொண்டு தேய்த்து, 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் தண்ணீரில் கழுவவும்.
அடுத்தமுறை சமைக்கும் போது கண்டிப்பா இந்த குறிப்புகளை முயற்சி செய்து பாருங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“