ஷாப்பிங் செய்யும் போது தள்ளுபடி பொருட்களையோ அல்லது சிக்கனமான சலுகைகளையோ பெறுவதற்கான எந்த வாய்ப்பையும் நாம் ஒருபோதும் இழக்க மாட்டோம். ஆடைகள், வீட்டுப் பொருட்கள் அல்லது மளிகைப் பொருட்கள் வாங்குவது எதுவாக இருந்தாலும், நாம் எப்போதும் தள்ளுபடிகள் மற்றும் விற்பனையைத் தேடுகிறோம்.
மளிகைப் பொருட்களை வாங்கும்போது, ஒரு பெரிய பையில் உருளைக்கிழங்கு நல்ல விலையில் இருப்பதைக் கண்டால், உடனே அதை வாங்குகிறோம். ஆனால் இந்த உருளைக்கிழங்கு நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் மற்றும் கவனிக்கப்படாமல் இருந்தால், அதில் சிறிய பச்சை வேர்களை முளைக்கும்.
உருளைக்கிழங்கு ஏன் முளைக்கிறது?
பெரும்பாலும், உருளைக்கிழங்கு முளைக்கத் தொடங்குவதற்கு காரணம் அதை சேமிக்கும் முறைதான். அவற்றுக்கு தேவை இருள் மற்றும் ஈரப்பதம், இது உங்கள் சமையலறையை உருளைக்கிழங்கு கண்களை வளர்க்கத் தொடங்குவதற்கு ஏற்ற இடமாக மாற்றுகிறது.
“உருளைக்கிழங்கு ஒரு உள்ளார்ந்த இயற்கையான தன்மையைக் கொண்டுள்ளது, இது தாவர ஹார்மோன்களால் பராமரிக்கப்படுகிறது. கிழங்கில் காலப்போக்கில் ஹார்மோன்களின் செறிவு குறைகிறது, இது கிழங்குகள் முளைக்க அனுமதிக்கிறது.
உருளைக்கிழங்கு இனப்பெருக்கம் செய்து புதிய தாவரங்களை உற்பத்தி செய்ய வேண்டுமானால், இது இயற்கையில் அவசியமாகும்.”
முளைத்த உருளைக்கிழங்கு சாப்பிடுவதற்கும் சமைப்பதற்கும் பாதுகாப்பானதா?
இல்லை, அவை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல. நேஷனல் கேப்பிடல் பாய்சன் சென்டர் (அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் பாய்சன் கன்ட்ரோல் சென்டர்ஸ் மூலம் அங்கீகாரம் பெற்ற அமைப்பு) படி, முளைத்த அல்லது பச்சை நிறமாக மாறிய உருளைக்கிழங்கை நிராகரிப்பது சிறந்தது.
முளைத்த உருளைக்கிழங்கு ஏன் சாப்பிட பாதுகாப்பற்றது?
உருளைக்கிழங்கு இரண்டு கிளைகோல்கலாய்டு சேர்மங்களின் இயற்கையான மூலமாகும் – சோலனைன் மற்றும் சாகோனைன். சிறிய அளவில் உட்கொள்ளும் போது, அவை ஆண்டிபயாடிக் பண்புகள் மற்றும் இரத்த-சர்க்கரை மற்றும் கொழுப்பைக் குறைக்கும் விளைவுகள் போன்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
இருப்பினும், அதிகளவு உட்கொள்ளும்போது அவை நச்சுத்தன்மையுடையதாக மாறும். உருளைக்கிழங்கு முளைத்தவுடன், அதன் கிளைகோல்கலாய்டு உள்ளடக்கம் உயரத் தொடங்குகிறது. எனவே, முளைத்த உருளைக்கிழங்கை உண்பதால், இந்த சேர்மங்களை அதிகளவில் உட்கொள்ளலாம்.
குறைந்த அளவுகளில், அதிகப்படியான கிளைகோல்கலாய்டு நுகர்வு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்திக்கு வழிவகுக்கிறது. அதிகளவு உட்கொள்ளும் போது, அவை குறைந்த இரத்த அழுத்தம், காய்ச்சல், தலைவலி மற்றும் சில சந்தர்ப்பங்களில் மரணம் கூட ஏற்படலாம்.
உருளைக்கிழங்கு முளைப்பதைத் தவிர்க்க எப்படி சேமிப்பது?
உருளைக்கிழங்கில் முளைப்பதைக் குறைப்பதற்கான சிறந்த வழி, அவற்றை சேமித்து வைப்பதைத் தவிர்ப்பதாகும். உங்கள் தேவைக்கேற்ப மட்டுமே அவற்றை வாங்கவும். மேலும், சேதமடைந்த உருளைக்கிழங்கு அப்புறப்படுத்தப்பட வேண்டும், மீதமுள்ளவற்றை குளிர்ந்த, உலர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் சேமிக்க வேண்டும். மேலும், அவை முளைப்பதை துரிதப்படுத்துவதால் வெங்காயத்துடன் சேமித்து வைக்கக்கூடாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“