நம் அனைவருக்கும் எல்லா நாட்களும் ஒரே மாதிரியாக இருக்காது. சில நாட்கள் சிறப்பாக இருந்தாலும், பல நாட்கள் மோசமாகி விடுகின்றன. நீங்களும் அந்த கெட்ட நாட்களில் ஒன்றை கொண்டிருந்தால், சில லைஃப் ஹேக்ஸ் இங்கே உள்ளன, அவை நிச்சயமாக உங்கள் வாழ்க்கையை ஒரு மென்மையான அனுபவமாக மாற்ற உதவும்.
Advertisment
தேங்காய் சிரட்டையில் ஊதுபத்தி ஸ்டாண்ட்
ஒரு யுஸ் அண்ட் த்ரோ கப்பில் கொஞ்சம் கோலமாவு போட்டு, தேங்காய் சிரட்டையை அதன்மேல் வைக்கவும். தேங்காய் கண் உள்ளே ஊதுபத்தி வைத்து, ஊதுபத்தி ஸ்டாண்ட் ஆக அதை பயன்படுத்தலாம். இப்படி செய்வதால் ஊதுபத்தியில் இருந்து விழும் சாம்பல் உங்கள் வீடு முழுவதும் பரவாது. தேங்காய் சிரட்டையிலே விழுந்து விடும்.
அதேபோல பேனா முடியில் டபுள் சைட் டேப் ஓட்டி, அதை உங்கள் வீட்டில் சுவர், நிலைகளில் ஓட்டவைக்கலாம். இதை ஊதுபத்தி வைக்கும் ஸ்டாண்டாக நீங்கள் பயன்படுத்தலாம்.
Advertisment
Advertisements
பிளாஸ்டிக் டப்பாவில் ஸ்கிரப்பர் ஸ்டாண்ட்
உங்கள் வீட்டில் பிளாஸ்டிக் டப்பா இருக்கிறதா? கத்தியை கொஞ்சம் தீயில் வாட்டி அதன் பின்புறம் சின்ன சின்ன ஓட்டை, ஓட்டையாக போட்டுக்கொள்ளவும். இப்போது அந்த டப்பாவில் டபுள் சைட் டேப் ஓட்டி அதை கிச்சனில் சிங்க் இருக்கும் சுவரில் ஓட்டி ஸ்டாண்டாக பயன்படுத்தலாம். இதில் நீங்கள் பாத்திரம் தேய்க்கும் ஸ்கிரப்பரை போட்டு வைக்கலாம்.
காய்கறி கெட்டுப் போகாமல் இருக்க
கடையில் இருந்து காய்கறிகள் வாங்கி வந்த உடனே அதை நன்கு துடைத்துவிட்டு அதன்மேல் எல்லா பகுதியும் படுமாறு குக்கிங் ஆயில் தடவவும்.
கேரட், முள்ளங்கியின் காம்பு பகுதி சீக்கிரம் அழுகிவிடும். எனவே அதன் காம்பு பகுதி மற்றும் நுனியை வெட்டிவிட்டு அதன்மேல் குக்கிங் ஆயில் தடவவும். பின்னர் காய்கறிகளை நியூஸ் பேப்பரில் நன்கு பொதிந்து, பிளாஸ்டிக் பையில் போட்டு, ஃபிரிட்ஜில் வைக்கலாம்.
இதேபோல, புதினா, கொத்தமல்லி தழையின் வேர்ப்பகுதியை வெட்டி, அழுகிய இலைகளை நீக்கிவிட்டு நன்கு கழுவி நியூஸ் பேப்பரில் சுற்றி வைக்கலாம். இதனால் கொத்தமல்லி தழை 15 நாட்கள் வரை வாடாமல் பிரெஷாக இருக்கும்.
இதேமாதிரி மேலும் பயனுள்ள பல கிச்சன் குறிப்புகளை கீழே உள்ள மை குக்கிங் மை டிப்ஸ் யூடியூப் சேனல் வீடியோல பாருங்க.