நம் அனைவரின் வீட்டிலும் எலுமிச்சை பழம் உள்ளது, நம்மில் பெரும்பாலோர் அதை சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் பலருக்கும் எலுமிச்சையின் நன்மைகள் பற்றி தெரிவதில்லை.
Advertisment
உங்கள் வாழ்க்கையை எளிதாக்க உதவும் சில எலுமிச்சை ஹேக்ஸ் இங்கே உள்ளன. படிக்கவும்.
கறை நீங்க!
* உங்களுக்கு பிடித்த துணியில், கடினமான கறை பட்டுவிட்டதா? எலுமிச்சை உங்களுக்கு உதவும். துணியில், கறை பட்ட இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். சில மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு, வழக்கம் போல, ஒரு சோப்பு பொடியைப் பயன்படுத்தி சாதாரணமாக கழுவ வேண்டும்.
ஃபிரிட்ஜ் நாற்றம் போக்க!
* உங்கள் ஃபிரிட்ஜில் நாற்றம் வீசுகிறதா? வாசனையிலிருந்து விடுபட எலுமிச்சை சாறு மிகவும் உதவியாக இருக்கும், எலுமிச்சை சாற்றில் ஒரு காட்டன் உருண்டையை ஊறவைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும்.
ஆப்பிள் நிறம் மாறாமல் இருக்க!
* ஆப்பிள் வெட்டிய சிறிது நேரத்தில் கருத்து விடுகிறதா? எலுமிச்சை, பழத் துண்டுகளை பழுப்பு நிறமாக மாறாமல் தடுக்கும். ஆப்பிள் துண்டுகளை நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க, தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சையை பிழிந்து, அதை கரைசலில் ஒருசில நிமிடங்கள் ஊறவைக்கவும்.
நகங்களுக்கு!
* இயற்கையான முறையில் நகங்களை வெண்மையாக்க எலுமிச்சை சாற்றையும் பயன்படுத்தலாம். நீங்கள் அணியும் அடர் நிற நெயில் பாலிஷ், சில நாட்களில் நகங்களில் நிறத்தை விட்டுவிடுகிறது., நீங்கள் அதை அகற்ற போராட வேண்டியுள்ளது.
ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரில், அரை எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து, குறைந்தது ஐந்து நிமிடங்களுக்கு உங்கள் நகங்களை அதில் ஊற வைக்கவும். கழுவும் முன், எலுமிச்சைத் தோலைக் நகங்களில் தேய்க்கவும். சிறிது நேரத்தில், உங்கள் நகங்கள் வெண்மையாக மாறுவதை நீங்கள் காண்பீர்கள்.
பொடுகுக்கு
* இது பலருக்கு ஆச்சரியமாக இருக்காது ஆனால் எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்துவது உங்கள் பொடுகை இயற்கையாகவே எதிர்த்துப் போராட உதவும்.
உங்கள் தலைமுடியைக் கழுவும் போதெல்லாம், எலுமிச்சை சாற்றை உச்சந்தலையில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து, பொடுகு எதிர்ப்பு ஷாம்பூவைக் கொண்டு கழுவினால், ஒரு குறிப்பிட்ட காலத்தில் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் இருப்பதாக கூறப்படுகிறது, இது நுண்ணறைகளின் வேர்களில் இருந்து பொடுகை விரட்ட உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “