ஒரு கப் தண்ணீரில் ஒரு பிடி கல் உப்பு... உங்க வீட்டு டைல்ஸ் சும்மா பளபளன்னு மின்னும்; ஒரு முறை ட்ரை பண்ணுங்க!
வீட்டில் டைல்ஸ் கல்லை சுத்தம் செய்வதில் பெரும் சோர்வு அடைந்து விடுவோம். எப்படித்தான் சுத்தமாக துடைத்தாலும் அங்கங்கே சுத்தம் இல்லாமல் இருக்கும். எப்போதோ ஒட்டிய கரை போகாமல் இருக்கும்.
நம்முடை வீட்டில் டைல்ஸ் கல் பதித்து இருந்தால் எப்படி எளிதில் சுத்தம் செய்யலாம் என்பது பற்றிய எளிய குறிப்பை இங்கு தந்துள்ளோம்.
நம்முடைய வீட்டை அன்றாட எப்படியெல்லாம் சுத்தம் செய்யலாம் என்பது குறித்து ஏரளமான குறிப்புகளை நமது இணையதளத்தில் வழங்கி வருகிறோம். அந்த வகையில், நம்முடை வீட்டில் டைல்ஸ் கல் பதித்து இருந்தால் எப்படி எளிதில் சுத்தம் செய்யலாம் என்பது பற்றிய எளிய குறிப்பை இங்கு தந்துள்ளோம்.
Advertisment
வீட்டில் டைல்ஸ் கல்லை சுத்தம் செய்வதில் பெரும் சோர்வு அடைந்து விடுவோம். எப்படித்தான் சுத்தமாக துடைத்தாலும் அங்கங்கே சுத்தம் இல்லாமல் இருக்கும். எப்போதோ ஒட்டிய கரை போகாமல் இருக்கும். அந்தக் கரையை சுத்தமாக போக்கவும், டைல்ஸ் கல் பளீச்சென்று இருக்கவும் எளிய குறிப்பை பார்க்கலாம்.
டைல்ஸ் கல்லை சுத்தம் செய்ய, ஒரு கப்பில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில், ஒரு கைப் பிடி கல் உப்பு சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் பல் துலக்கும் டூத் பேஸ்ட் சிறிதளவு எடுத்து சேர்க்கவும். இதனை நன்கு கலந்து விட்டுக் கொள்ளவும். இதில் ஒரு பங்கை வீடு துடைக்க வைத்துள்ள தண்ணீருடன் சேர்க்கவும். மீதமுள்ளவற்றை டைல்ஸ் கல் இருக்கும் பகுதிகளில் தெளித்து விட்டுக் கொள்ளவும்.
பிறகு, வீடு துடைக்கும் துடைப்பானைக் கொண்டு சுத்தம் செய்யத் தொடங்கலாம். இப்படி எல்லா இடங்களிலும் துடைத்து விட்டால் வீடு டைல்ஸ் கல் பளபளப்பாக மாறும். வீடும் சுத்தமாகும். கல் உப்பு கொண்டு வீடு துடைக்கும் போது, நேர்மறையான எண்ணங்கள் வர இது உதவும்.