/indian-express-tamil/media/media_files/2025/05/06/OfICBtXlbK6XkBc1wVCz.jpg)
நான் - ஸ்டிக் தவாவில் தோசை சுடுவதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். அதற்காக, இரும்புக் கல்லில் மட்டுமே தோசை சுட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்படுகிறது.
எனினும், இரும்புக் கல்லில் தோசை சுட்டால் அது பிய்ந்து வருவதாக பலரும் கூறுவார்கள். இதனை தடுப்பதற்கு ஒரு சிம்பிளான டிப்ஸ் இருக்கிறது. இதனை பின்பற்றுவதன் மூலம் இரும்புக் கல்லிலும் எளிதாக தோசை சுட முடியும்.
இதற்காக வெண்டைக்காயின் முனைப்பகுதிகள், முற்றிய வெண்டைக்காய்கள் மற்றும் ஒரு பெரிய வெங்காயம் ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் பசை பதத்திற்கு அரைக்க வேண்டும்.
இந்தப் பசையை இரும்பு தோசைக் கல் மீது நன்றாக தேய்க்க வேண்டும். இத்துடன் சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். இந்தக் கலவையை தோசைக் கல் முழுவதும் தேய்த்த பின்னர், ஒரு நாள் முழுவதும் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
அதன் பின்னர், தோசைக் கல் மீது இருக்கும் பசையை முற்றிலும் கழுவி விட வேண்டும். இதையடுத்து, கல்லை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி, சிறிதளவு உப்பு, விளக்கெண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து துடைக்க வேண்டும்.
இவ்வாறு செய்த பின்னர், இந்தக் கல்லில் தோசை சுடும் போது அவை பிய்ந்து போகாமல் வரும். தோசையையும் மெலிதாக சுட்டு எடுக்கலாம்.
நன்றி - Nalini Manick Cooking Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.