பானங்கள், கறிகள் முதல் இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகள் வரை, எலுமிச்சை சாறு’ சமையலறையில் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக, எஞ்சியிருக்கும் எலுமிச்சைத் தோல்களை தூக்கி எறிவோம். ஆனால் அவை கறைகளை சுத்தம் செய்ய, துர்நாற்றத்தை அகற்றுவது என பல்வேறு வேலைகளைச் செய்யப் பயன்படும். எனவே, அடுத்த முறை, எலுமிச்சை தோல்களை குப்பையில் போடாதீர்கள்!
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த எலுமிச்சை தோல்களை பயன்படுத்தும் முறைகள் இங்கே!
கைகளில் இருந்து துர்நாற்றத்தை அகற்ற
பொதுவாக வெங்காயம் அல்லது பூண்டை வெட்டிய பிறகு, கைகளில் கடுமையான வாசனையை விட்டுவிடும், இது சோப்பு போட்டு கழுவிய பிறகும் நீடிக்கும். இந்த வாசனையை ஒரு நொடியில் போக்க, உங்கள் விரல்கள் மற்றும் நகங்களில்’ எஞ்சிய எலுமிச்சை தோல்களை தேய்க்கவும். இது துர்நாற்றத்தை அகற்றி, உங்கள் கைகளில் ஒரு புதிய வாசனையை விட்டுவிடும்.
துணிகளில் இருந்து கறைகளை நீக்க!
சாப்பிடும் போது உங்கள் சட்டையில் சிறிது கறி விழுந்து விட்டதா? மஞ்சள் கலந்த கறிகள்’ பொதுவாக துணியில் ஒரு கடினமான கறையை விட்டுவிடும், அதில் சோப்பு பயன்படுத்தினால்’ இன்னும் மோசமாகும்.
கறையை நீக்க, கறையின் மீது சில துளிகள் எலுமிச்சை சாற்றை பிழிந்து, ஒரு சிட்டிகை உப்பைத் தூவி, கறையை எலுமிச்சைத் தோலுடன் (கூழ் பக்கத்திலிருந்து) தேய்க்கவும். ஸ்க்ரப் செய்தவுடன், சட்டையை வெயிலில் வைக்கவும். கறையை முழுவதுமாக அகற்ற மீண்டும் 2-3 முறை செய்யவும்.
வாசனை திரவியம்
தங்கள் வீட்டில் மிதக்கும் இனிமையான நறுமணத்தை விரும்பாதவர் யார்? எலுமிச்சையின் புதிய மற்றும் சிட்ரஸ் வாசனையை நீங்கள் விரும்பினால், மீதமுள்ள எலுமிச்சை தோலைக் கொண்டு’ நறுமணத்தை உருவாக்கலாம். 2-3 எலுமிச்சை தோல்களை எரித்து, உங்கள் வீட்டின் எந்த மூலையிலும் ஒரு பாத்திரத்தில் வைக்கவும். செயற்கையான ப்ரெஷ்னர்களைப் பயன்படுத்தாமல் உங்கள் வீட்டைப் புத்துணர்ச்சியாக்க இது எளிதான வழியாகும்.
செராமிக் பாத்திரங்கள் பிரகாசமாக
உங்களுக்குப் பிடித்தமான செராமிக் பாத்திரங்கள்’ அதன் பிரகாசத்தை இழந்துவிட்டதா? உங்கள் வெள்ளைப் பாத்திரத்தில் கடினமான மஞ்சள் கறைகள் உள்ளதா? கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு தேவையானது எலுமிச்சை மட்டுமே. மீதமுள்ள எலுமிச்சைத் தோலை எடுத்து, அதன் மீது ½ டீஸ்பூன் பேக்கிங் சோடாவைத் தூவி, அதனுடன் பாத்திரங்களைத் தேய்க்கவும். அதை 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு, மென்மையான பாத்திரங்களைக் கழுவும் சோப்புடன் கழுவவும், உங்கள் பாத்திரங்கள் புதியதாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.