தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு என்னதான் பிஸியாக இருந்தாலும், இலால்குடியில் இருக்கும் தனது 163 ஏக்கர் தென்னந்தோப்பையும் அதில் அமைந்திருக்கும் பிரம்மாண்ட மாட்டுப் பணையும் பார்க்காமல் இருந்ததில்லை.
அரசியலில் தீவிரமாக இருந்தாலும், தான் ஒரு விவசாயி என்பதை பெருமையாக சொல்கிறார் அமைச்சர் கே.என். நேரு. விவசாயத்தில் லாபமே இல்லாவிட்டாலும் விவசாயிகள் விவசாயத்தை விடுவதில்லை என்று விவசாயத்தின் நிலையையும் விவசாயிகளின் பெருமையையும் கூறுகிறார்.
அமைச்சர் கே.என். நேரு தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், இலால்குடி அருகே உள தனது 163 ஏக்கர் தென்னந்தோப்பையும் ஒரு பிரம்மாண்ட மாட்டுப் பண்ணையையும் சுற்றிக் காட்டி தனக்கு விவசாயத்தின் மீது இருக்கும் பிடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மற்ற தொழில்களைச் செய்பவர்களைப் போல இல்லாமல், வேலை நிறுத்தம் இல்லாமல், தங்கள் வேலைகளைச் செய்பவர்கள் விவசாயிகள்தான். நஷ்டம் ஏற்பட்டாலும் விவசாயத்தை விடாமல் செய்பவர்கள் விவசாயிகள் என்று விவசாயிகளைப் பற்றிக் கூறுகிறார்.
தனது மாட்டுப்பண்ணையில், சாகிவாலா, தார் பார்க்கர், ஹரியானா போன்ற பிற மாநிலத்தைச் சேர்ந்த மாடுகள் வளக்கபடுவதைக் கூறுகிறார். தனது பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் பால் முழுவதுமாக ஆவின் நிறுவனத்துக்கு அளிக்கப்படுகிறது என்பதைக் கூறுகிறார்.
அமைச்சர் கே.என். நேரு தனது தென்னந்தோப்பில், மாட்டுப் பண்னை வைத்து மாடு வளர்ப்பதோடு மட்டுமில்லாமல், 500 ஆடுகள் வளர்ப்பதாகவும் கூறுகிறார். மேலும், தேனி வளர்ப்பு செய்யப்படுவதைக் காட்டுகிறார்.
விவசாயம் தனது சிறுவயது முதல் அப்பா சொல்லிக் கொடுத்தது. என்ன ஆனாலும் விவசாயத்தை விட முடியாது. தனக்கு விவசாயத்தை தவிர வேறு தொழில் தெரியாது. என்னதான் பணிச்சுமை இருந்தாலும், இந்த விவசாய நிலத்துக்கு வந்தால் நிம்மதியாக இருக்கும் என்று அமைச்சர் கே.என். நேரு கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“