நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த மூட்டு வலிப் பிரச்சனை, வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரையும் ஆட்டிப்படைக்கிறது. மாடிப்படி ஏற முடியாமல், நடப்பதற்கே கஷ்டப்பட்டு, அன்றாட வாழ்க்கையே போராட்டமாக மாறும் நிலை பலருக்கும் உண்டு. ஆனால், இதற்கெல்லாம் ஒரு சூப்பரான, எளிமையான தீர்வு நம் சமையலறையிலேயே இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?
Advertisment
டாக்டர் சவுமிளா பரிந்துரைக்கும் உளுந்து - கடுகு காம்பினேஷன், மூட்டு வலியை மாயமாக மறைய வைக்கும் அற்புத சக்தி கொண்டது.
தேவையான பொருட்கள்:
முழு உளுந்து - 500 கிராம் கடுகு - 200 கிராம்
Advertisment
Advertisements
தயாரிக்கும் முறை:
முதலில், முழு உளுந்தை கடுகுடன் சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். இதை ஒரு மெல்லிய தூளாக (fine powder) அரைக்க வேண்டும்.
அரைத்த இந்தத் தூளுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் ஒரு மென்மையான பேஸ்ட் (fine paste) பதத்திற்கு கலக்கிக்கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
தயாரித்த இந்தப் பசையை உங்கள் தொடைப் பகுதியிலிருந்து கால் பாதம் வரை முழுமையாகப் பூசவும். காலின் முன் மற்றும் பின் பகுதிகள் என முழுக்க இரண்டு கால்களிலும் நன்கு தடவவும்.
பூசிய பிறகு, 20 முதல் 30 நிமிடங்கள் வரை அதை உலர விடவும். கலவை காய்ந்த பிறகு, உங்கள் கால்களை தண்ணீரால் கழுவலாம் அல்லது ஒரு துண்டை வைத்து மெதுவாகத் துடைக்கலாம்.
பலன்கள்:
இந்த எளிய முறையைத் தொடர்ந்து 48 நாட்களுக்குப் பயன்படுத்தி வந்தால், மூட்டு சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் பெறலாம். இது மூட்டு வலிகளைக் குறைத்து, கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு சக்திவாய்ந்த தீர்வாகும்.
இருப்பினும், தீவிரமான மூட்டு வலி அல்லது வேறு ஏதேனும் மருத்துவ நிலைமைகள் இருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.