மழுங்கி போன கத்தியை 2 நிமிடத்தில் ஷார்ப்பாக மாற்றலாம்… இந்த டிப்ஸ் டிரை செய்து பாருங்க!
மங்கிய கத்திகள் சமையல் வேலைகளை கடினமாக்குவதோடு, காயங்கள் ஏற்படவும் வழிவகுக்கும். கடைகளுக்குச் சென்று தீட்டக் கொடுப்பது அல்லது புதிய கத்தி வாங்குவது எனப் பலரும் யோசிப்பார்கள்.
மங்கிய கத்திகள் சமையல் வேலைகளை கடினமாக்குவதோடு, காயங்கள் ஏற்படவும் வழிவகுக்கும். கடைகளுக்குச் சென்று தீட்டக் கொடுப்பது அல்லது புதிய கத்தி வாங்குவது எனப் பலரும் யோசிப்பார்கள்.
உங்கள் வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் கத்தி அல்லது வேறு எந்தக் கத்திரிக்கோலும் மழுங்கிப் போய்விட்டதா? காய்கறிகள் வெட்டவோ அல்லது வேறு எந்த வேலைக்கும் சிரமமாக இருக்கிறதா? இதைச் சரிசெய்ய நீங்கள் புதிதாக ஷார்ப்னர் வாங்க வேண்டியதில்லை. மிக எளிமையான, இரண்டு நொடித் தீர்வு ஒன்று இருக்கிறது.
Advertisment
முதலில், மழுங்கிய முனையை இரண்டு விநாடிகள் கவனமாக நெருப்பில் காட்டுங்கள். பிறகு, உங்கள் வீட்டில் உள்ள ஒரு செராமிக் கோப்பையைத் தலைகீழாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அதன் அடிப்பாகம் சொரசொரப்பாக இருக்கும் அல்லவா? அந்த சொரசொரப்பான பகுதியில், நெருப்பில் காட்டிய கத்தி அல்லது கத்திரிக்கோலின் முனையைத் தேய்க்கத் தொடங்குங்கள்.
இவ்வாறு சில முறை தேய்த்ததும், ஆச்சரியப்படும் விதமாக, உங்கள் கத்தி அல்லது கத்திரிக்கோல் மீண்டும் கூர்மையாக மாறியிருப்பதை நீங்கள் உணரலாம். இந்த எளிய முறையை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.