/indian-express-tamil/media/media_files/2025/05/31/Fs5lI2pKhV10UW5kE9XP.jpg)
வேப்பிலையை இப்படி அரைத்து அப்ளை பண்ணுங்க… பிம்பிள்ஸ் மறையும்!
”அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்ற பழமொழி ஒன்று உள்ளது. அதாவது நாம் மனதில் என்ன நினைக்கின்றோம்? என்பதை நம்முடைய முகமானது மற்றவர்களுக்கு அப்படியே தெரியப்படுத்தும் என்பதே இதன் அர்த்தம். நமது முகமானது எப்போதும் பிரகாசத்துடனும், அழகாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் நாம் அனைவருடைய விருப்பமாக இருக்கும். ஆனால், இந்த முகப்பருக்கள் வந்து அதனை நிறைவேற விடாமல் செய்துவிடும். வேப்பிலை கொண்டு முகப்பருக்களை எவ்வாறு மறைய வைப்பது? என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம். இதனை, நடிகை ஸ்திருதிகா பின்பற்றிதான் பொலிவான முகத்தை பெற்றதாக சே ஸ்வாக் என்ற யூடியூப் சேனலின் நேர்க்காணலில் கூறியுள்ளார்.
சுருக்கம் இல்லாத, தெளிவான, களங்கமற்ற சருமத்தை நீங்கள் விரும்பினால், வேப்பபிலை கொண்டு தயாரிக்கப்பட்ட பேஸ் மாஸ்க் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். ஆயுர்வேதத்தில் வேம்புக்கு தனி முக்கியத்துவம் உண்டு. இது சக்திவாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கொண்டுள்ளது. இது முகத்தில் உள்ள முகப்பருவைக் குறைக்கும். மேலும் பல வழிகளில் சரும தொற்றுகளை குறைக்கலாம். வேப்பிலையில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உங்கள் சரும செல்கள் சேதமடைவதைத் தடுக்கும். மேலும், இது மெலனின் உருவாவதைத் தடுக்கும். வேப்பபிலை கொண்டு தயார் செய்த ஃபேஸ் பேக்குகளை தவறாமல் தடவி வந்தால் சில வாரங்களில் நல்ல பலன் கிடைக்கும். இந்த ஸ்பெஷல் ஃபேஸ் பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்: வேப்ப இலை - ½ கப், தண்ணீர் - 1 முதல் 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
செய்முறை: வேப்ப இலை மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது தயார் செய்துள்ள இந்த பேஸ்ட்டில் சிறிது மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தடவவும். சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் வரை உலர விடவும். பின்னர் உங்கள் முகத்தை சாதாரண நீரில் கழுவவும்.
இந்த பயனுள்ள ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை தடவினால் உங்கள் சரும பிரச்சனைகள் அனைத்திலிருந்தும் விடுபடலாம். முகத்தில் உள்ள கருவளையம் மற்றும் சுருக்கங்கள் பிரச்சனையை குறைக்க இந்த செய்முறையை முயற்சி செய்யலாம். இருப்பினும், வேப்பபிலை காரணமாக உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை புகார் இருந்தால், இந்த சூழ்நிலையில், நிச்சயமாக ஒரு நிபுணரின் உதவியை எடுத்துக் கொள்ளுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.